பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 201 வைப்பு முறையிலும் கம்பன் ஏதோ உட்கருத்தோடு இப்படலப் பெயர்களை வைத்தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. கடல் என்று கூறினவுடன் பிறவிக் கடல் என்பது பலருடைய உள்ளத்திலும் தோன்றி நிற்கும். பிறவி என்பது ஒரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர்வரை பல்வேறு பிறவிகளையும் குறிக்கும். அதனாலேயே வள்ளுவப் பேராசான் பிறவிக் கடல் என்று கூறாமல், பிறவிப் பெருங்கடல் நீந்துவர் (10) என்றும் பிறவாழி (பிறவு ஆழி) என்றும் கூறிப்போனார். வள்ளுவர் கணக்குப்படி பிறவியாகிய ஆழியைக் கடப்பவர் இறைவன் அடி சேர்வர் என்பது தேற்றம். இக்கருத்தை மனத்துட் கொண்ட கம்பநாடன் கடல் தாவு படலம்' என்று முதற் படலத்திற்குப் பெயரிட்டு, தாவினவர்கள் என்ன பயனைப். பெறுவார்கள் என்று கூறுபவன் போலக் கடைசிப் படலத்திற்குத் திருவடி தொழுத படலம்' என்று பெயரிட்டான். பிறவிக் கடலைத் தாண்டினால் கிடைப்பது திருவடி என்ற கருத்து இங்கே புதைந்துள்ளமை அறியப்பெற வேண்டும். சுந்தர காண்டத்தின் முதற்படலம் கடல் தாவு படலமாகும். பிறவிக் கடலையும் தாண்டுவதற்கு என்ன தேவையென்பதைக் கிட்கிந்தா காண்டத்தின் மயேந்திரப் படலம் கூறுகிறது. பிறவிக் கடலை ஒருவன் - தாண்டவேண்டுமேயானால் அதற்குச் சில அடிப்படையான பண்புகள் தேவை. முதலாவது, யான், எனது என்னும் செருக்கற்ற நிலை (5-6). அடுத்தபடியாக வேண்டப்படும் பண்பு, புலனடக்கம் ஆகும். அதை வலியுறுத்த வந்த வள்ளுவப் பேராசான். அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும் வேண்டிய வெல்லா மொருங்கு (35.3) என்றும், 'ஒருமையுள் ஆமைபோல், ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து (13.5) என்றும் கூறியவற்றால் அறியலாம். அடுத்துள்ள பண்பு தொண்டு மனப்பான்மை யாகும். இதில் முற்றிலுமாக ஈடுபட்டவர்களை இறைவன் ஆட்கொள்கிறான் என்பதை, தன் கடன் அடியேனையும் தாங்குதல் என் கடன் பணி செய்து கிடப்பதே (தேவாரம் 5.19.9 என்ற நாவுக்கரசர் வாக்கால் நன்கு அறியலாம். பிறவிக் கடலைத் தாண்ட மேலே கூறிய அனைத்தும் தேவை யென்பதை நன்கு அறிந்த