பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 கம்பன் எடுத்த முத்துக்கள் கம்பநாடன், இத்தனை பண்புகளும் அனுமனிடம் உள்ளன என்பதைக் காட்டவே மயேந்திரப் படலத்தில் சாம்பவன் கூற்றாகப் பத்துப் பாடல்களில் விளக்கமாகக் கூறுகிறான். இராமகாதை கூறிச்செல்வதோடு மட்டுமல்லாமல் வாய்ப்புக் கிடைக்குமிடங்களிலெல்லாம் இந்நாட்டின் பெரியோர் கண்ட தத்துவங்களையும் சாம்பன் கூறிச் செல்வதைக் காண முடியும். கதைப் போக்கு என்று விட்டு விடாமல் படலப் பெயர்களைக்கூடச் சிந்தித்துக் கூறியுள்ளான் என்ற நோக்கத்தோடு காண்போமேயானால் இத் தத்துவங்களை நன்கு அறிய முடியும். கடலைத் தாண்டப் புகுந்த அனுமன் முதலாவது சந்திப்பது மைந்தாக மலையே யாகும். அம்மலை மானுட வடிவு தாங்கி அனுமனை விருந்துண்ணுமாறு அழைக்கின்றது. ‘கடமையை முடித்தலது உண்ண மாட்டேன்’ என்று கூறும் அனுமன், 'என் பணி முடித்து மீண்டும் வந்தால் உன் விருந்தினை ஏற்றுக்கொள்கிறேன்' என்று வந்துவிட்டான். அடுத்து அனுமன் சந்திப்பது சுரசை என்னும் அரக்கியை ஆகும். தேவர் உலகப் பெண்ணாகிய இவள் அனுமனின் ஆற்றலை அறிவதற்காக அரக்கி வடிவுடன் தேவர்களால் அனுப்பப் பெற்றவள் ஆவாள். இவ்வரக்கியின் ஆற்றலை வெல்ல முடியுமா என்பது தேவர்களின் ஐயம். என்றாலும், சுரசைக்கும் அனுமனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் அனுமனின் பண்பு நலன்களில் ஒரு பகுதியை விளக்குகிறது. கோர வடிவத்துடன் நின்ற சுரசை மிகக் கொடிதாகி வருத்தும் இப்பசியைப் போக்க உன்னை உண்ணப்போகிறேன். நீயே வந்து என் வாய்க்குள் நுழைந்துவிடு' என்று கூறுகிறாள். (4807) அரக்கர் நாட்டில் புகப்போகும் அனுமன் - அரக்கர் குலத்தை வேருடன் களைய வேண்டும் என்று நினைத்து வரும் அனுமன் இவ்வரக்கியைக் கண்டவுடன் சினம் கொள்ளாமல் நின்றது ஏன்? இதேபோன்ற ஒரு சந்தர்ப்பம் அனுமனின் தலைவனாகிய இராமனுக்கும் ஏற்பட்டது உண்டு. அப்பொழுதும் அவன் பகைமை பாராட்டவோ சினம் கொள்ளவோ இல்லை. காரணம், தாடகை அரக்கி என்று அறிந்திருந்தும் பெண்ணென மனத்திடை பெருந்தகை