பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 கம்பன் எடுத்த முத்துக்கள் அனுமன். அதே நேரத்தில் இந்த இரண்டு இடையூறுகளையும் தான் எவ்வாறு வெல்ல முடிந்தது என்று சிந்தித்தான். விடை எளிதாகக் கிடைத்துவிட்டது. வன்மையும், கொடுமையும், பூண்ட கரசையும் அங்காரதாரையும் பின்னர் அவன் காணப்போகும் அரக்கர்களின் பிரதிநிதிகளாக இருந்தனர். இவர்களை வெல்ல முடிந்ததென்றால் அரக்கர் கோட்டைக்குள் புகுவதும் எளிதாகும். விண்ணுற உயர்ந்து மலையெனப் பெருகும் தன் உடல் ஆற்றலைமட்டும் நம்பி இவ் இருவரையும் தான் அழித்ததாக அனுமன் கருதவில்லை. இதன் பின்னே தனக்குத் தோன்றாத் துணையாக இருந்து, இவர்களை வெல்லுமாறு செய்தது எது என்ற வினாவை எழுப்பி விடை கூறுகிறான். - தேறல் இல் அரக்கர் புரி தீமை அவை தீர, ஏறும் வகை எங்கு உளது? "இராம” என எல்லாம் மாறும், அதின் மாறு பிறிது இல் என வலித்தான் (4828) என்ற கருத்தை அனுமன் இவ்வளவுதுணிவோடு கூறுவதற்குக் காரணம் யாது என்று சிந்திப்போமேயானால், இந் நிகழ்ச்சிகட்குச் சற்று பின்னர் (சம்பாதிப் படலம்) அனுமன் கண்ட காட்சியே இந்த உறுதிப்பாட்டை அவனுக்குத் தந்தது. சடாயுவின் சகோதரனாகிய சம்பாதி (என்ற கழுகு நீண்ட காலமாகத் தன் சிறகுகள் இரண்டும் அற்ற நிலையிலேயே இருந்தான். பன்னெடுங் காலமாகவும் அச்சிறகுகள் வளரும் வழியை அறிந்தான் இல்லை. மயேந்திர மலையில் அனுமன் முதலியோர் ஒன்று கூடியபொழுது இராம நாமத்தின் மகிமையைச் சம்பாதி கூறினான். 'எல்லீரும் அவ் இராம நாமமே சொல்லீர் சொல்ல, எனக்கு ஒர் சோர்வு இலா நல் ஈரப் பயன் நண்ணும் (4695) - என்று சம்பாதி கூறவும், அன்னது காண்டும் யாம்' எனா, நின்றார் நின்றுழி, நீல மேனியான்