பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 207 மூவரின் ஒருவன் ஆம் ஈட்டான் (4964 என்று பேசுவதால் பகைவரைக் குறைத்து மதிப்பிடும் பண்பு அனுமனிடம் இல்லை என்பதை உணர்கிறோம். அடுத்தபடியாக அவன் காண்பது வீடணனை ஆகும். வீடணன் யார் என்பதும், அவன் அறவாழ்வை மேற்கொண்டவன் என்பதும் அனுமனுக்குத் தெரியாது. இருந்தும் அவனது மனைக்குள் புகுந்தவுடன் அந்த வீட்டிலுள்ள எண்ண அதிர்வுகள் துய்மையானவை என்பது புலன் அடக்கம் மேற்கொண்ட அனுமனுக்கு உடனே புரிந்துவிடுகிறது. அதைப் புரிந்துகொண்ட அனுமன் உறங்குகின்ற வீடணனின் உணர்வுகளோடு (எண்ண அதிர்வுகளோடு) தன்னுடைய உணர்வுகளையும் ஒத்திட்டபொழுது வீடணன் துயவன் என்பதை அனுமன் உணர்ந்துகொள்கிறான். அதன் பயனாகத் தீமையே புரிந்து வாழ்கின்ற அரக்கரிடையே இப்படியும் ஒருவனா என்று வியக்கிறான். கள்ளி வயிற்றில் அகில் பிறப்பதுபோல் (நான்மணி. 6) தீமையே நிறைந்துள்ள இலங்கையில் தருமம் ஒளிந்து வாழ்வதுபோல ஒருவன் வாழ்கிறான் என்று நினைக்கிறான் அனுமன். இதனைக் கூறவந்த கவிஞன், ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்தனை உற்றான் (4970) உற்று நின்று, அவன் உணர்வைத் தன் உணர்வினால் உணர்ந்தான்; 'குற்றம் இல்லது ஒர் குணத்தினன் இவன் எனக் கொண்டான் (4971) என்று கூறுகிறான். மூன்றாவதாக, அனுமன் காண்பது இந்திரசித்தனை ஆகும். அவனைப் பார்த்தமாத்திரத்தில் அனுமனுடைய மனத்தில் தோன்றிய எண்ண ஓட்டத்தையும், முடிவையும் கவிஞன் ஒரே பாடலில் கூறிவிடுகிறான். . 'வளையும் வாள் எயிற்று அரக்கனோ? கணிச்சியான் - மகனோ? - அளையில் வாள் அரி அனையவன் - யாவனோ? அறியேன்;