பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 கம்பன் எடுத்த முத்துக்கள் இளைய விரனும், ஏந்தலும், இருவரும், பலநாள் உளைய உள்ள போர் இவனொடும் உளது என - . - - உணர்ந்தான் (4975) என்பது அப்பாடல் ஆகும். இதுவரை அனுமன் கண்ட மூவரையும் - அவர்கள் யாவர் என்றோ, எத்தகைய ஆற்றல் படைத்தவர்கள் என்றோ அறியாமலும் தன் கூர்ந்த மதியால் எடைபோட்ட அனுமன், இந்திரசித்தனிடம் வரும்பொழுது மிக உயர்ந்த நிலையை அடைந்துவிடுகிறான். 'கணிச்சியான் மகனோ இவன்' என்று ஐயுறுவது நியாயமானதே. ஆனால், முன்பின் பார்த்திராத ஒருவனை உறங்கும்போது பார்த்துவிட்டு அவனுடைய பலத்தை எடைபோடுவது என்பது எத்தகைய அறிவில் உயர்ந்தவருக்கும் ஒரளவு இயலாத காரியம் என்றே கூறிவிடலாம். அப்படியிருக்க, மூன்றாம், நான்காம் அடிகளில் காணப்பட்ட முடிவிற்கு எவ்வாறு அனுமனால் வர முடிந்தது? இராம, இலக்குவரை நன்கு அறிவான் அனுமன். வாலியை உரங்கழிக்க வல்லவனும், மராமரங்களை ஒர் அம்பால் துளைக்க வல்லவனும் ஆகிய இராமனையும், சுக்கிரீவனுடைய கோட்டை மதில்களையும் கதவுகளையும் காலால் எட்டி உதைத்துத் தகர்க்க வல்லவனும் ஆகிய இலக்குவனையும் நன்கு அறிவான் அனுமன். ஆனால், உறங்குகின்றவனைப்பற்றியோ அவன் யார் என்பதையோ அவன் வீரச் செயல்கள் என்ன என்பதுபற்றியோ என்ன வென்று அறியாத அனுமன் இராமனும் இலக்குவனும் இவனுடன் பல நாள் போர்புரிய வேண்டியிருக்கும் என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தான் ? - - இந்த நிலையில் இராமன் அனுமனை முதன்முதலில் சந்திக்கும் சூழ்நிைைலபற்றி அறிவது பயனுடைய தாகும். யார் என்ற இராமன் வினாவிற்குத் தன் தாய் தந்தையர் யாவர், தன் பெயர் யாது, தான் செய்யும் பணி யாது என்ற விடைகளைத் தந்தான் அனுமன். அவன் கூறிய விடை சாதாரணமாக யாரும் கூறக்கூடியதே யாகும். அந்த விடையினால் இளையபெருமாள் கவரப்பட வில்லை யென்றாலும், இராகவன் தேற்றம் உற்று,