பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அசஞானசம்பந்தன் - 209 . இவனின் ஊங்குச் செவ்வியோர் இன்மை தேறி, ஆற்றலும், நிறைவும், கல்வி அமைதியும், அறிவும் என்னும் வேற்றுமை இவனோடு இல்லையாம். 3767) - என்ற முடிவிற்கு வந்தான். மேலும் தொடர்ந்து, "மாணி ஆம் படிவம் அன்று, மற்று இவன் வடிவம், மைந்த! ஆணி இவ் உலகுக்கு எல்லாம் என்னலாம் ஆற்றற்கு ஏற்ற சேண் உயர் பெருமை தன்னைச் சிக்கு அறத் தெளிந்தேன்; பின்னர்க் காணுதி மெய்ம்மை என்று, தம்பிக்குக் கழறி, கண்ணன் - (3769) கூறி முடிக்கிறான். அனுமன் பேசிய பத்துச் சொற்களைமட்டும் வைத்துக்கொண்டு அவனை முற்றிலுமாக அளந்துவிடுகிறான். அந்த இராம பக்தனாகிய அனுமன் இன்னார் எனறுகூட அறிந்துகொள்ளாத அரக்கனை எடைபோடுவதே வியப்பிற்குரிய தாகும். அதைவிட வியப்பிற்குரியது இராம - இலக்கு வர்கள் இவனுடன் கடுமையாகப் போரிட வேண்டிவரும் எனக் கணிப்பதாகும். அனுமனது நுண்மாண் துழைபுலத்தால் எந்த வொன்றையும் நடுநிலை பிறழாமல் எடைபோடக் கூடியவன் என்பதையும் மேலே கூறிய செய்திகள்மூலம் நன்கு அறியலாம். இதனை அடுத்து அனுமன் செய்கின்ற முடிவுகளில் ஒரேயோர் இடத்தில் சிறு பிழை ஏற்படுகிறது. பேரழகும் பெருங்கற்பும் உடைய மண்டோதரி - (உறங்குபவளைப் பார்த்து இவள் பிராட்டியோ என ஐயுறுகிறான். - மாபெரும் அறிஞனான அனுமன் மண்டோதரியைப் பார்த்து இப்படியொரு முடிவிற்கு வரக் காரணம் யாது: இராமனை இன்னான் என்று அறிந்துகொண்டவன் அனுமன், இராமனுடைய தேவி பகைவனுடைய அந்தப்புரத்தில் முழு அலங்காரங்களோடு இருக்க முடியுமா என்ற சாதாரண மனிதர்களுக்கும் தோன்றுகின்ற - சந்தேகம் அனுமனுக்குத் தோன்றாமல் போனது ஏன் ? எளிதில் விடை கூற முடியாத இந்தப் பகுதியை ஆழ்ந்து சிந்தித்தால் விடை கூற முடியும். 14