பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 கம்பன் எடுத்த முத்துக்கள் அனுமன் இவ்வாறு ஐயம் கொள்வதற்குக் காரணமாக இருந்தவன் இராமனே ஆவான். மாபெரும் துயரத்தில் ஆழ்ந்திருந்த இராகவன் யாரிடம் பேசுகிறோம், யாரைப் பற்றிப் பேசுகிறோம் என்று சிந்திக்காமல் ஒரு சிறிய பிழையைச் செய்தான். கிட்கிந்தா காண்டத்தி லுள்ள நாட விட்ட படலத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. தென்திசையை நோக்கிச் செல்லுகிறவர்கள் அனுமன், அங்கதன் முதலானவர்கள் என்று முடிவு செய்யப்பெற்ற பின் இராகவன் அனுமனைத் தனியே அழைத்துச் சீதையை அடையாளம் கண்டுகொள்வதற்காக அனுமனிடம் அவளைப்பற்றி வருணிக்கின்றான். நாட விட்ட படலத்தில் 28 பாடல்களில் (4484 - 45 இராமன் இவ் வருணனையைச் செய்கிறான். பாதாதி கேசமாகச் சொல்லப்படும் இந்த வருணனை தேவை யில்லாததுமட்டு மன்று, பொருத்த மற்றதும் ஆகும். இரண்டு காரணங்களால் இதற்கொரு சமாதானம் கூறலாம். காப்பியப் புலவர்கள் இப்படியொரு வாய்ப்பு நேரும்போழுது பெண்களை விருணிப்பது உலகக் காப்பியங்கள் அனைத்திலும் காணப்படும் ஒன்றாகும். கம்பநாடனும் இதற்கு விலக்கல்ல்ன் என்பதைனையே இப்பகுதி காட்டிநிற்கிறது. இவ்வாறு, பாதாதி கேசம் என வருணிப்பதில் தவறில்லை என்றாலும், ஈது கூறப்பட்ட இடம், சந்தர்ப்பம் என்பவை பொருத்த மில்லாதன ஆகும். அடுத்துள்ள காரணம் ஒன்று உண்டு. பிரிவுத் துயரில் மூழ்கியிருக்கும் இராகவன் சீதையின் ஒவ்வோர் உறுப்பையும் நினைத்து வருந்துதல் இயல்பே ஆகும். உடன் வருபவ னாகிய இலக்குவனிடம் இவ்வாறு பேசுதல் தகாத தாகும். அடுத்து, சுக்கிரீவனிடம் தன் மனநிலையைப் பேசலாம் என்றால், சுக்கிரீவன் மன வளர்ச்சியில் இராமனுக்கு ஐயம் உண்டு. எனவே, அவனிடம் பேசுவதும் பொருத்தம் இல்லை. இந்த நிலையில் அவன் மனத்தில் நிறைந்த அனுமனின் வளர்ச்சியையும் அறிவுத் திண்மையையும் அறிந்த இராகவன் இவ்வாறு வருணிப்பதற்கு அனுமனையே இடமாகக் கொள்கிறான். இதனால் இரண்டு குறைகள் தோன்றுகின்றன. அனுமன் சுக்கிரீவனுக்கு அமைச்சனேயாயினும் இராமனிடம்