பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.க.ஞானசம்பந்தன் 2世 தொண்டனாகவே பழகுகிறான். அப்படிப்பட்டவனிடம் இவ்வளவு விரிவாகச் சீதையின் அழகை வருணித்ததால் அனுமனுடைய மனத்தில் ஒர் ஒவியம் படிந்துவிட்டது. மாதர்நலம் பேணாதவனும் பிரமச்சாரியுமான அனுமன் மனத்தில் எந்தப் பெண்ணின் உருவமும் இதுவரை பதிந்ததே இல்லை. எனவே, இராமன் கூறிய அங்க அடையாளங்கள் அவனுடைய மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டன. நீண்ட காலம் பிரிந்து வெளிநாடு சென்றுவிட்டுத் திரும்பி வருகின்றவர்களை விமான நிைைலயத்தில் சந்திக்கச் செல்பவர்கள் அவர்களுடைய படங்களை வைத்துக்கொண்டு வருபவர்களை ஒப்பிட்டுப் பார்ப்பதுபோல அனுமன் மனத்தில் இராகவன் எழுதிய ஒவியத்தோடு மண்டோதரியை ஒப்பிட்டுவிட்டான் அனுமன். பிராட்டியைப் போன்ற அழகும் அவள் போன்ற கற்பி ன் திண்மையும் உடைய மண்டோதரியைக் கண்டு பிராட்டியோ என அனுமன் சந்தேகித்ததில் தவறு ஒன்று மில்லை. ஒரு விநாடி. ஐயத்திற்குப் பிறகு எந்த நிலையிலும் இராகவன் மனைவி இராவணன் அந்தப்புரத்தில் நுழைய மாட்டாள் என்ற முடிவிற்கு வந்து விட்டான். கற்புடைய மகளிர் பிறர் நெஞ்சு புகார் என்பதைச் சற்று விரித்துப் பிறர் மனையிலும் புகார் என்னும் முடிவிற்கும் வந்துவிட்டான். எனவே, அறிஞனான அனுமன் மனத்தில் இப்படிப்பட்ட ஐயம் வரலாமா என்ற ஐயம் தோன்றினால் அதற்குரிய முழுப் பொறுப்பும் இராமனையே சேரும். இதற்கு அடுத்தபடியாக, இலங்கைவாழ் மக்களின் வாழ்க்கையைக் கவனித்த அனுமன், அந்த நகரத்தின் புறவமைப்பைக் கண்டு “நரகம் ஒக்குமால் நல்நெடுந்துறக்கம் இந் நகர்க்கு (4848) என்று கூறுகிறான். புறவமைப்பில் ஈடுபட்டு இவ்வாறு புகழ்ந்து பேசிய அனுமன் அங்கு வாழ்கின்ற மக்களின் வாழ்க்கையை மறைந்து நின்று கண்டு அதனை வருணிக்கப் புகுகின்றான். மூவுலகையும் வென்ற மறவன் தலைநகரில் தேவர்கள் பணி செய்யும் தலைநகரில் மக்களின் இன்ப வாழ்க்கைக்கு ஓர் எல்லை கூறமுடியுமோ? அதனைக் கூற வந்த கவிஞன் இரு பொருள்படப் பேசுகிறான்.