பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 - கம்பன் எடுத்த முத்துக்கள் அளிக்கும் தேறல் உண்டு, ஆடுநர் பாடுநர் ஆகி, களிக்கின்றார் அலால், கவல்கின்றார் ஒருவரைக் காணேன் - . (4864) என்பது அனுமன் கூற்றே. மேலாகப் பார்ப்பவர்கட்கு இவர்கள் பெருமகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் என்ற பொருள்படக் கூறுகிறான். ஆனால், அது இயற்கையான மகிழ்ச்சியா, செயற்கையான மகிழ்ச்சியா என்ற வினாவிற்கு விடை தருபவன்போல உவக்கின்றார்' எனறு கூறாமல் 'களிக்கின்றார் என்று பேசுகிறான். கம்பநாடன் காலத்தில் களித்தல் என்ற சொல்லுக்கு மது அருந்தி இன்பம் அடைவதே பொருளாகும். ஒரு வேளை அந்தச் சொல்லுக்கு இந்தப் பொருள் இருப்பதை மறந்துவிடுவோமோ என்று கருதி, அளிக்கும் தேறல் உண்டு ஆடுநர் பாடுநர் ஆகிக் களிக்கின்றார். என்று கவிஞன் கூறுகிறான். எல்லை மீறிய மதுப் பழக்கத்தில் தோன்றும் களிப்புக் காரணமாக இலங்கை வாழ் அரக்கர்களின் வாழ்க்கை கவலையை மறந்து வாழும் வாழ்க்கையாக அமைந்துவிட்டதைக் காணமுடிகின்றது. நகரம், மக்கள், குறிப்பிட்ட சில பாத்திரங்கள் ஆகியவற்றை மறைந்துநின்று காண் கையிலேயே அவ்வவ்வற்றை மிக நுணுக்கமாகக் கண்டு ஆய்ந்து ஒரு முடிவுக்கு வரும் சிறப்பை அனுமன் பெற்றிருந்தமையை ஊர் தேடு படலம் காட்டி நிற்கிறது. இக்காண்டத்தின் மூன்றாவது படலமாக அமைந்துள்ளது: காட்சிப் படலம் ஆகும். ஊர் முழுவதும் தேடிப் பிராட்டியைக் காணாமையால், அசோக வனத்தில் வந்து தேடுகையில் பிராட்டியை அவன் கண்டதைக் கூறும் படலம் இது. வம்பு செய்யும் அரக்கியரிடையே மென்மருங்குல்போல் வேறுள அங்கமும் மெலிந்து துவண்டுபோய் அமர்ந்திருக்கும். பிராட்டியை ஒரு மரத்தின்மேலிருந்து நோக்குகின்றான், வாயுவின் மைந்தன், கீழே இறங்கிவந்து அவளிடம் பேசி இவள்தான் சிதை என்று முடிவுசெய்வதற்கு முன்னரே மரத்திலிருந்தபடியே இவள்தான் பிராட்டி என்ற முடிவிற்கு அவனால் எவ்வாறு வர முடிந்தது: நுண்மாண் நுழைபுலம் r