பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 217 மிகவும் இரங்கத்தக்கவளாக இதுவரை காட்சி தந்த பிராட்டி திடீரென்று, "அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ? எல்லை நீத்த உலகங்கள் யாவும், என் சொல்லினால் கடுவேன்; அது, தூயவன் - வில்லின் ஆற்றற்கு மாக என்று, விசினேன் 5362) என்று வீறு தோன்றப் பேசுகிறாள். விசுவரூபம் எடுத்து அனுமன் எதிரே பேசிய பேச்சாகும் இது. வில்லேர் உழவனாகிய தன் கணவனுக்கு உலகை அழிக்க வில்லின் துணை வேண்டும். கற்பின் செல்வியாகிய தனக்கு வில்கூடத் தேவையில்லை. தன் சோல்லே கருவியாகும் என்று பேசுகிறாள். இராமனுடைய ஆற்றலை வாலி வதையிலும் மராமரங்களிலும் கண்ட அனுமனுக்குப் பிராட்டியின் இந்தச், சொற்கள் இதுவரை மறைந்திருந்த அவளுடைய புதிய பரிமாணத்தைக் காட்டிப் பொலிவு பெறுகின்றன. சூடாமணிப் படலத்தின் தனிச்சிறப்பாகும் இது. இதே படலத்தில் திருமகளேயானாலும், மானுட உடம்பு எடுத்தால் அதற்கேற்ற வாழ்வே அமைகின்றது என்பதை அறிய ஒரு வாய்ப்பும் ஏற்படுகிறது. மனித உணர்ச்சிகள் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. அலைகள் எழுந்து மடங்குவதுபோல உணர்ச்சிகள் மேல் எழுவதும் கீழ் இழிந்து செல்வதும் யல்பு. காட்சிப் படலத்தில் பிராட்டியை வைத்தே கவிச்சக்கரவர்த்தி இந்த அற்புதத்தைச் செய்துகாட்டுகிறான். மனம் நொந்து மாதவிப் பொதும் பரைத் தேடிச் செல்கின்றபொழுது உணர்ச்சியின் கீழ் இழிந்துபோகும் நிலை அடுத்தபடியாக அனுமனைச் சந்தித்து இராம இலக்குவர்கள் தன்னைத் தேடி வருகின்றார்கள் என்று உணரும்பொழுது அந்த உணர்ச்சி மேல் ஓங்குகிறது, அந்த உச்ச கட்டம்தான் 'என் சொல்லினால் சுடுவேன்' என்றது. இந்த உச்ச கட்டம் நீண்ட நேரம் நிலைபெறமுடியாது. மகிழ்ச்சி, துயரம் என்ற எந்த உணர்ச்சியும் உச்ச கட்டத்தில் நீண்ட நேரம் இருக்க முடியாது. அதனை அற்புதமாக வெளிப்படுத்துகிறான் கவிச்