பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 கம்பன் எடுத்த முத்துக்கள் சக்கரவர்த்தி, பிராட்டியின் இந்த உணர்ச்சியும் உச்ச கட்டத்தில் நீண்டநேரம் இருக்க இயலாது. அதனை அற்புதமாக வெளிப்படுத்தும் கவிச் சக்கர்வர்த்தி, பிராட்டியின் இந்த உணர்ச்சி மறுபடியும் கீழிறங்கிச் செல்வதை (5372 -5387) 15 பாடல்களில் விரிவாகப் பேசுகிறான். இதில் 5372 - 5376 வரையுள்ள பாடல்கள் நம்பிக்கை இழந்த மனநிலையைக் காட்டுகின்றன. இதுவரை நடந்தவற்றையெல்லாம் கூறிய அனுமன், தான் இராமனிடம் சென்று தகவைைலத் தெரிவித்தவுடன் இராமன் வானரப்படையொடு வருவான் எனத் தேற்றியும், பிராட்டி இந்த ஐந்து பாடல்களில்) நம்பிக்கை இழந்து பேசுகிறாள். இன்னும் ஒரு மாதத்தில் வராவிடில் இராமன் மீது ஆணையாக தன் உயிரை விட்டுவிடுவேன் என்றும், தன்னை வந்து மீட்பதற்குரிய தகுதி தன்னிடம் இல்லையென்றாலும் மனைவியை இழந்து சும்மா இருந்துவிட்டா னென்று அவனுடைய வீரத்தை 'உலகம் பழிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இராமன் தன்னை மீட்க வரவில்லை என்றாலும் தன்னைக் காத்து நின்ற இளைய பெருமாளுக்கு இப்பொழுது தன்னை மீட்பது கடமை என்றும் கூறிக்கொண்டே வருகின்றவள், முற்றிலுமாக மனம் உடைந்து பின்வரும் பாடலைக் கூறுகிறாள்: . . "திங்கள் ஒன்றின் என் செய்தவம் தீர்ந்ததால்; இங்கு வந்திலனே எனின், யாணர் நீர்க் கங்கை யாற்றங்கரை, அடியேற்குத் தன் செங் கையால் கடன் செய்க" என்று செப்புவாய் 5376) இவ்வாறு பேசுவதால் அனுமன் வார்த்தைகளிலோ, இராமன் வரவிலோ ஐயம் கொண்டு பேசினாள் என்று நினைப்பது தவறு. எத்துணை உறுதிப்பாடு உடையவர்களாயினும் மென்மைத் தன்மையுடைய பெண்களுக்கு இத்தகைய உணர்ச்சிப் போராட்டங்கள் தோன்றுவதும் நம்பிக்கை, நம்பிக்கையின்மை மோதல் தோன்றுவதும் இயல்பே ஆகும். சீதையும் இதற்கு விதிவிலக்கல்லள் என்பதைக் காட்டவும் கவிஞன் இவ்விடத்தைப் பயன்படுத்துகிறான். . . .