பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 219 பெண்களின் மென்மை காரணமாகப் பல்வேறு வகையான குழப்பங்கள் அவர்களுடைய மனத்தில் தோன்றுவது இயல்பு மாய மான்பின்னே சென்ற இராகவன் பிராட்டிக்குக் காவலாக இளையவனை வைத்துச் செல்கிறான். இராமன் குரலில் இலக்குவா என்ற அபயக் குரல் கேட்கிறது. இது அரக்கனின் சூழ்ச்சி என்பதை அறிந்துகொண்ட இலக்குவன், கவலை இல்லாது நிற்கிறான். இராமனுக்கு ஆபத்து வந்துவிட்டது என்று கலங்கிப்போன பிராட்டி உடனே இராமனைத் தேடிச் செல்லுமாறு இலக்குவனை ஏவுகிறாள். அந்தக் கமலக் கண்ணனை யாரென்று நீங்கள் அறியவில்லையா? பதினான்கு உலகங்களையும் அழிக்கவல்ல் அவனுக்கு யாராலும் தீங்கு ஒன்றும் வராது என்று எவ்வளவோ எடுத்துச்சொல்கிறான். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத சீதை, இராமனிடம் ஒரு பகல் பழகியவர்கள்கூட அவனுக்காகத் தம் உயிரைக் கொடுப்பர். அத்தகைய திருமகன் அழிகின்றான என்ற செய்தியை அறிந்தும் கொஞ்சமும் துயர் உறாமல் துணிவோடு நிற்கின்ற இளையவனே! இனி உன்னிடம் பேசுவதில் பயனில்லை. நான் எரியிடை மூழ்குவேன்' என்று புறப்பட்டுவிட்டாள். (333) விதிக்கும் விதியாகும் என் வில் தொழில் (1735 என்று ஒரு காலத்தில் பேசியவன் இளையவன். நிகழ்ச்சிகளின் நடைமுறையைக் கண்டும் இாாகவனே அதைத் தடுத்து நிறுத்தாமல் அதன் வழியே செல்வதைக் கண்டும் மனத்தளர்ச்சி அடைந்துவிட்டான். இது மாய மான், அரக்கர் சூழ்ச்சி, இதை நானே பிடித்துவருகிறேன் என்று இலக்குவன் கூறிய சொற்கள் அனைத்தும் அடிபட்டுப் போய்விட்டன. இறுதியாக அவன் கடமை என்று கருதியது பிராட்டியைக் காவல் செய்தது ஆகும். இப்பொழுது அதுவும் அடிபடுகிறது. இந்த நிலையில் எரியிடைப் புகுவேன் என்ற பிராட்டியை வீழ்ந்து வணங்கி, அன்னையே! அரசன் ஆணையை மறுத்து, நீர் இடும் ஆணையை ஏற்றுச் செல்கிறேன். வெஞ்சின விதியை யாரும் வெல்ல முடியாது போலும் (3334) என்று கூறிவிட்டு ச், செல்கிறான், பேரறிவாளனாகிய இளையபெருமாள். அயோத்தியி லிருந்து புறப்பட்டது முதல்