பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 கம்பன் எடுத்த முத்துக்கள் விதி நடத்தும் நாடகத்தைப் புறநிலையில் நின்று கவனித்து, ஏதோ ஒரு பேரிடர் வரப்போகிறது என்று தன் நுண்மாண் நுழைபுலத்தால் கணித்துவிட்டான். அடியாரின் ஏவல் செய்பவனாக வந்த அவன் இந்தப் பேரிடரைக் களைவது தன். கடமை என்று முடிவிற்கு வந்தவனாய் அதனை எதிர்ப்ார்த்து நிற்கின்றான். எந்தப் பிராட்டியைக் காவல் செய்வது தன் தலையாய கடமை என்று நினைத்து நின்றானோ அந்தப் பிராட்டியின் வாய்ச் சொற்களாலேயே பேரிடர் புகுந்துவிட்டது. 'ஊழிற் பெருவலி யாவுள. மற்றொன்று சூழினும் தான் முந்துறும் (38.10) என்ற குறளுக்கேற்பக் காக்கப்பட வேண்டியவள் சொற்கள்மூலமே பேரிடர் புகுகின்றது என்பதை அந்த நுண்ணறிவாளன் கண்டு பேசுகிறான். "போகின்றேன் அடியனேன்; புகுந்து வந்து கேடு ஆகின்றது (3334 என்றும், "பொருப்பு அனையானிடைப் போவெனேன். எனின் அருப்பம் இல் கேடு வந்து அடையும்" (3335) என்றும் உறுதிபடக் கூறுகிறான். கேடு அடைந்தது என்றும் அடையும் என்றும் நன்கு தெரிந்திருந்தும் அவனால் ஒன்றும் செய்ய முடியலில்லை. இவ்வளவு விரிவாக இதனைக் பேசுவதற்கு ஒரு காரணம் உண்டு. பிராட்டியைக் காத்து நின்றவன் இளையவன். அந்தக் காவலை விட்டு நீங்குவதற்கு அவன் காரணன் அல்லன். காத்து ஆள்பவனாகிய அவன் காவலை இகழ்ந்து செல்லவில்லை; யாரைக் காவல் செய்கிறானோ அவளே (சீதை அவன் காவலை இகழந்து போகுமாறு பணித்தாள். எவ்வளவு எடுத்துச்சொல்லியும் அவள் கேட்கத் தயாராக இல்லை. விதி நின்றது, அவள் மனத்தை உந்தி அவனை ஏவிற்று; அதே விதி அவன் பிடரை உந்திச் செல்க' எனப் பணித்தது. எனவே, சீதையின் இந்நிலைக்கு அவளே முற்றிலும் காரணம் ஆகிறாள். அசோக வனத்தில் தன் பிழையை நினைத்து வருந்துகின்ற நேரத்தில் தன்னுடைய அறிவுக்குக் குறைவான செயலை நினைத்து இராகவன் தன்னை ஒதுக்கியிருப்பானோ என்று எண்ணினாள். - என்னை, நாயகன் இளவலை, எண்ணலா வினையேன் சொன்ன வார்த்தை கேட்டு, "அறிவு இலன்" எனத் துறந்தானோ? (5082)