பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 221 எனவே, அசோகவனத்தில் இத்தகைய நிலைக்குத் தான் வருவதற்குரிய காரண்ம் இளையவனைப் பேசியதுதான் என்று உணர்கிறாள். அப்படியிருந்தும் அனுமனிடம் பேசும்போது, நடந்தவற்றையெல்லாம் மறந்துவிட்டுப் பின்வருமாறு பேசுகிறாள். . * ...'. ஏத்தும் வென்றி இளையவற்கு, ஈது ஒரு வார்த்தை கூறுதி; "மன் அருளால் எனைக் காத்து இருந்த தனக்கே கடன், இடை கோத்த வெஞ்சிறை விடு" என்று கூறுவாய் (5375) பெண்களுக்கே உரிய தருக்கமுறை என்று சொல்வதுண்டு. மன்னன் ஆணையை மீறி இளையவனைப் போ எனச் சொன்னவள் அவள்தான். காவலை விட்டுச் செல்லுமாறு பணித்தவளும் அவள்தான். அப்படியிருக்க “மன் அருளால் எனைக் காத்து இருந்த தனக்கு" என்று கூறுவது வியப்பாக இருக்கிறது. எப்படியாவது தனக்கு விடுதலை வேண்டும் என்ற ஆதங்கத்தில் இலக்குவனுடைய மன நோவைத் தணிக்க வேண்டுமென்று நினைக்காமல் பேசும் பேச்சு இது, அவன் கடமையிலிருந்து தவறிவிட்டவன் போலவும், அந்தத் தவற்றிற்குக் கழுவாய் தேட வேண்டும் என்று சொல்பவள் போலவும் இக்கூற்று அமைந்திருக்கிறது. இறைவனுக்குச் செய்யும் தவற்றைக் காட்டிலும் இறைவனுடைய அடியார்க ளாகிய பாகவதருக்குச் செய்யும் தவறு மன்னிக்கப்பட முடியாதது. இராம அனுசனாகிய இலக்குவனுக்கு இரண்டு தவறுகளை இழைத்துவிட்ட பிராட்டி அதற்குக் கழுவாயாகத் தீக்குளிக்க நேரிடுகிறது. பகவத் அபசாரத்தைவிடப் பாகவத அபசாரம் கொடுமையானது என்ற இக்கருத்தைப் பேராசிரியர் டாக்டர் ம.ரா.போ. குருசாமி அவர்கள் இராமாயணச் சிந்தனை' என்ற நூலில் எடுத்துக் காட்டியுள்ளார். இதிலொரு சிறப்பு என்னவென்றால், தன்னம்பிக்கையில் இமயம் போன்று உயர்ந்து நிற்கும் அனுமனிடம் பிராட்டியை இவ்வாறு தன்னம்பிக்கை இழந்து பேசவைக்கிறான் கவிஞன். இராமனிடம் பெற்றுவந்த கணையாழியைப் பிராட்டியிடம் கொடுத்தது போல அவளுடைய சூடாமணியைப் பெற்றுச் செல்கிறான் அனுமன், -