பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 கம்பன் எடுத்த முத்துக்கள் தன் எதிரிலேயே தன் பகைவனைப் புகழ்ந்தான் என்று இராவணன் சினவாதிருக்க இந்த அறிமுகத்தைச் செய்துவிட்டு இரு கை கூப்பினான். மகனுடைய இக்குறிப்பை 'ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து அறிவமைந்தவ னாகிய இராவணன் பழைய எள்ளலை விட்டுவிட்டு அனுமனிடம் மிகச் சீரிய முறையில் பேசத் தொடங்குகிறான். "திருமாலோ, இந்திரனோ, சிவபெருமானோ, நான்முகனோ, ஆதிசேடனோ, இவர்களுள் யார் நீ (5975) வேள்வியில் வந்த பூதமோ, நான்முகன் அனுப்பிய தெய்வமோ (5876) யார் நீ?" என்று வினாக்களை இர்ாவணன் தொடுப்பதிலிருந்து இராவணன் எந்த அளவுக்கு மாறியுள்ளான் என்பதை அறிய முடிகிறது. புன் தொழில் குரங்கு என்று எள்ளி நகையாடினவனைக் கிங்கரர் முதல் அக்ககுமாரன்வரை அழிந்தோர் பட்டியல் மனமாற்றம் கொள்ளச்செய்தது உண்மைதான். ஆனால் அவற்றால்மட்டும் அவன் மாறிவிட்டான் என்று கூறுவதற்கில்லை. அப்படி மாறியிருப்பினும் வரிசை வரிசையாகச் சம்புமாலி முதல் அக்க குமாரன் வரையில் பலியிட்டிருக்க மாட்டான். ஒரளவு மனத்தில் யார் இவன் என்ற ஐயம் தோன்றியிருக்குமே தவிர, இத்தனை வினாக்களைத் தொடுக்கும் அளவிற்கு இலங்கேசன் மனமாற்றம் கொள்ளவில்லை. அவனால் பெரிதும் மதிக்கத் தக்கவனாகிய இந்திரசித்தனையும், அவன் கூறும் சொற்களையும் கவனத்துடன் கேட்கும் இயல்புடையவ னாதலால் இந்திரசித்தன் சொற்கள் இராவணன் மனத்தை மாற்றிவிட்டன. அதிலும் பகைவன் இல்லாத இடத்தில் புகழாமல் அவனை நேரே வைத்துக்கொண்டு தந்தையினிடம் 'உருவு கண்டு எள்ள வேண்டா. இவன் சிவன், திருமால், இருவருள் ஒருவனே என்று இந்திரசித்தன் பேசினால், அவை பொருளுடைய சொற்கள் என்று மதித்துப் போற்றினான் இராவணன். அந்த மனநிலையில்தான் நேமியோ, கணிச்சியோ என்று ஆரம்பித்தான். - இத்தனை வினாக்களுக்கும் விடை கூற வல்ல அனுமன் தான் யார் என்பதை (5878 - 5885) எட்டுப் பாடல்களில் விடை கூறுகிறான். எட்டு யானைகள் இந்த மாபெரும்