பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 229 உலகத்தைத் தாங்குவது போல கம்பநாடனுடைய கடவுட் கொள்கை என்ற மாபெரும் தத்துவத்தை இந்த எட்டுப் பாடல்கள் தாங்கி நிற்கின்றன. மூலப் பரம்பொருளை எல்லாச் சமயங்களும் தத்தமக்கே உரிய முறையில் வருணித்துள்ளன. சில சமயங்கள் மூலப் பொருளுக்கு இலக்கணம் கூறவும் முற்பட்டன. இவையனைத்தையும் ஒன்று திரட்டிப் பார்த்தால் இரண்டு வகையாக அவை இச்செயலைச் செய்கின்றன என்பதை அறிய முடியும். கடவுள் என்ற தமிழ்ச் சொல்லேகூடத் தன்னுள் முரண்பாட்டைக் கொண்டதாகும். 'கட' என்ற பகுதி, வாக்கு மனோலயம் கடந்தது என்பதை குறிக்கும். 'உள்' என்ற விகுதி இவை அனைத்தின் உள்ளேயும் ஊடுருவி நிற்கும் என்பதைக் குறிக்கும். கடந்து நிற்கும் பொருளே உள்ளே நிற்பது என்பதும், எங்கும் உள்ளிடாக ' உள்ள பொருளே கடந்து நிற்பது என்பதும் சற்று விரோதமானதுதான். உண்மையைக் கூறவேண்டுமானால் எ ல் லாவற்றிலும் உள் ளீடாக உள்ள பொருள் அப்பொருளினுள் மட்டும் தங்கிவிடாமல் எல்லாவற்றையும் கடந்தும் நிற்பது என்ற பொருளையும் தரலாம். முரண்பாட்டி னிடையே முழுமுதலைக் கண்ட பெருமை இத் தமிழர்களும் , உரியதாகும். இக் கருத்துக்களை யெல்லாம் மனத்துகொண்ட கவிச்சக்கரவர்த்தி தக்கதோர் இடத்தைத் தேடிக் கொண்டிருந்தான். இந்தப் பார காவியத்தில் இரண்டு இடங்கள் மிகப் பொருத்தமாக அவனுக்குக் கிடைத்தன. உண்மையைக் கூற வேண்டுமானால், ஒர் இடத்தை அவனே தேடிக்கொண்டான். இரணியன் வதைப் படலம் என்று யுத்த காண்டத்தில் காணப்படும் பகுதி வான்மீகி முதல் எந்த இராமாயணத்திலும் காணப்படாத பகுதியாகும். பிணி வீட்டு படலத்தில் எட்டுப் பாடல்களில் சொல்லிய பாடல்கள் உபநிடத வாக்கியங்கள் போல் மிகச் சுருக்கமாக அமைந்துள்ளன. இதை விரிவாகப் பாடவே இரணியன் வதைப் படலத்தைத் தானே புதிதாகச் சேர்த்துக் கொண்டான். இனி இங்குள்ள எட்டுப் பாடல்களும் இரணியன் வதையிலுள்ள பாடல்களும் ஒரு பொதுத்தன்மையைக் கொண்டுள்ளன. இரண்டு இடங்களிலும் இருவரிடையே