பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 கம்பன் எடுத்த முத்துக்கள் நடைபெறும் உரையாடல்களே இடம் பெற்றுள்ளன. இங்கு அனுமன், இராவணன் என்ற இருவரிடையே உள்ள உரையாடல். அங்கு இரணியன், பிரகலாதன் என்ற இருவரிடையே உள்ள உரையாடல். அனுமன், பிரகலாதன் என்ற இருவரும் கற்றுணர்வோடு மெய்யறிவும் நிரம்பியவர்கள். அவர்கள் கல்வி அறிவால் தோன்றிய ஆணவத்தை வித்யா கர்வம்) அவர்களிடத்தி லுள்ள மெய்யறிவு (பரஞானம்) அழித்து விட்டது. ஆனால், அனுமன் எதிரே உள்ள இராவணன், பிரகலாதன் எதிரே உள்ள இரணியன் இருவரும் வெற்றுக் கற்றறிவோடு நின்றவர்கள். தவ வலிமையால் நிற்பவர்கள். ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து அறிவு அமைந்தவ்ன் இராவணன் (6:119) என்றாலும், மெய்ஞ்ஞானம் பெறாத நிலையில் உண்மையைக் காண மறுக்கிறான். ஒரோ வழி மெய்ஞ்ஞானம் வந்து உண்மைப் பொருளை அறிவுறுத்தினாலும் அவனுடைய ஆணவத்தோடு கூடிய கல்வி அறிவு அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நேமியோ, கணிச்சியோ என்று தொடங்கும் அத்தனை பாடல்களில் வினாவிய இராவணனுக்கு எட்டுப் பாடல்களில் விடை இறுக்கிறான் அனுமன். இப்பாடல்கள் இரண்டு வகையில் மெய்ப்பொருளை உணர்த்துகின்றன. உபநிடதம் நேதி என்று சொல்வதுபோல, இவனில்லை, இவனில்லை' என்று எதிர்மறை முகத்தாலும். இவன்தான்' என்று உடன்பாட்டு முகத்தாலும் நிறுவ முயல்கிறான் கம்பன், மூலப்பொருளின் இயல்பை எதிர்மறை முகத்தால் கூறப்போகும் அனுமன் கீழ்வருமாறு கூறுகிறான்: தேவரும் பிறரும் அல்லன், திசைக்களிறு அல்லன், திக்கின் '. காவலர் அல்லன், ஈசன் கைலைஅம் கிரியும் அல்லன்; மூவரும் அல்லன் மற்றை முனிவரும் அல்லன்; . (5881) மெய்ஞ்ஞான மின்மையின் மூலப்பொருளை அறியாது தவிக்கும் இராவணன் தேவர்கள் தலைவர்களாக உள்ள மும்மூர்த்திகளையே மதித்துவந்தான். அக்கருத்துப் பிழையானது என்று மறுத்துவந்த அனுமன், "சொல்லிய