பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 231 அனைவரும் அல்லன் அப் புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலேன்" (5878) என்று குறிப்பிடுகிறான். இப்பொழுது இராவணனுக்கு ஐயம் பிறக்கிறது. அவ்ன் கண்ட மும்மூர்த்திகளைப் புல்லிய வலியனோர் என்று கூறிவிட்ட பிறகு அனுமன் யாருடைய தூதன் என்ற வினா எழும் அல்லவா? எனவே, அதற்குரிய விடையை அனுமன் பேசத் தொடங்குகிறான். இதற்குரிய பாடல்கள் உடன்பாட்டு முகமாக அமைந்திருத்தல் காண்டற்குரியன். அனையவன் யார்? என, அறிதியாதியேல், முனைவரும், அமரரும், மூவர் தேவரும், எனையவர் எனையவர் யாவர், யாவையும் நினைவு அரும் இரு வினை முடிக்க, நின்றுளோன் (5879) 'இவனுடைய தலைவன் யார் என்று ஆவலோடு விடையை எதிர்பார்த்திருக்கும் இராவணனுக்கு விடை கூறப்புகும் அனுமன் மகான்கள், தேவர்கள், மும்மூர்த்திகள் போன்றவர்களும், ஏனைய பொருள்களும் எவ்வெவற்றை நினைக்கவும் முடியாது என்று கருதுகின்றனவோ அவற்றையும், அவற்றின் நினைவிற்கு அப்பாற்பட்டவற்றையும் செய்துமுடிக்கும் தரமுடையவன் என் தலைவன்’ என்கிறான். இந்தப் பாடலினாலும் இராவணனுக்கு அவன் தலைவன் யாரென்று புலப்படவில்லை. அப்படிப் புலப்பட்டாலும் அவனுக்கும எனக்கும் என்ன சமபநதம' எனறு நினைப்பது நியாயமே. தன்னலத்தின் முழுவடிவையும் பெற்று விளங்கும் இராவணன் எந்த ஒன்றையும் தன்னோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் இயல்புடையவன். எனவே, இரண்டாவது பாடலில் 'நீ மிகப் பெரிதாகக் கருதியுள்ள தவம், வர பலம், ஆயுத பலம், புகழ் ஆகிய அனைத்தையும் ஒரே அம்பால் போக்கும் ஆற்றலன் அவன் என்ற கருத்தில் கூறுகிறான். (5880) தவங்களைச் செய்து வரங்களைப் பெற்று, அவற்றின் பயன் தனக்கு உறுதியாகக் கிட்டும் என நம்புகின்றவன் இராவணன். இவற்றோடு அல்லாமல் மறைகளைக் கற்றமையின் தனக்கு ஞானம் உண்டென்றும் கருதுபவன் அவன். பலரோடு உசாவிக் கேள்விப் பயனையும் பெற்றவன்.