பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 கம்பன் எடுத்த முத்துக்கள் இவையனைத்திற்கும் தான் நினைக்கும் பயன் கைவரும் என்று கருதி இறுமாந்து இருப்பவன். அவனது நம்பிக்கையின் ஆணிவேரையே அசைக்கின்ற முறையில் அனுமன் விடை கூறுகின்றான். உன்னுடைய கல்வி ஞானம், கேள்வி ஞானம், தவ வலிமை எல்லாமும் என்ன பயனைத் தரவேண்டுமென்று அவன் நினைக்கிறானோ அந்தப் பய ன் க ைள தருமேயல்லாமல் நீ எதிர்பார்க்கும் பயன்களைத் தரா. இதற்குரிய காரணத்தை அறியவேண்டு மென்று கருதினால் நீ கற்கும் அபெளர்ஷேய மாகிய வேதங்களின் சொற்களுக்கு அப்பாற்பட்டு அவற்றின் உண்மையான பொருள் ஆகி நிற்பவனும் (வேத ஸ்ரூபி) அறவடிவினனு மாகிய ஒருவன் உளான். (5882) இராவணன் மனத்தில் நிலைகொண்டுள்ள மற்றோர் எண்ணத்தையும் அசைக்கின்றான் அனுமன். ஆயிரம் மறைப்பொருள் அறிந்தவ னாதலானும் உபநிடதங்களைக் கற்றறிந்தவ னாதலாலும் மூலப்பொருளைத் தன்னறிவு கொண்டும் இம்மறைகளின் துணை கொண்டும் அறிந்திருப்பதாகவே கருதியுள்ளான். இராவணனின் அந்த எண்ணத்தைத் தகர்க்க முற்படுகிறான் அனுமன். கற்றறிவினால் மட்டும் உண்மைப் பொருளை உணரமுடியாது என்ற கருத்தை 'முடிவில்லாத வேதங்களும், உபநிடதங்களும் இன்னான் என்று சுட்டிக்காட்ட மாட்டாமே அவனை ஆராயப் புகுகின்ற அறிவினுக்கு உள்ளே ஒளிந்து நிற்பவன் ஆகிய ஒருவன் அவன் என்று குறிப்பிடுகிறான். இவ்வாறு கூறுவதில் ஒரு பெரிய பிரச்சினை தோன்றுகிறது. கல்வி, கேள்வி, வேள்வி, தவம், வேதம், உபநிடதம், அறிவு ஆகிய அனைத்திற்கும் அப்பாற்பட்டவன் என்று கூறிவிட்டால் நம்முடைய மனத்தில் ஒருவகைச் சலிப்பு உண்டாகும். பற்ற முடியாத அப்பொருளைப் பற்ற நினைத்தால் எவ்விதப் பயனும் ஏற்படபோவதில்லை என்ற சலிப்புத் தோன்றும். இப்பிறப்பில்மட்டு மல்லாமல் எப் பிறப்பிலும் நம்முடைய முயற்சியால், தவத்தால், கல்வி கேள்வியால், வேள்வியால் அதனை அடைய முடியாது என்றால், அதை விட்டுவிடுவது தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்படும். இந்த