பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 235 கடந்து இவற்றை உடைய எல்லாப் பொருள்களுக்கும் ஆதி காரணமாய் உள்ளவன் என்ற பொருளைப் பெறவைக்கிறான அனுமன். இறை இலக்கணத்தை ஈடு இணையற்ற முறையில் சென்ற பாடலில் விளக்கிய அனுமன், இராவணனுடைய அடுத்த வினாவை மனத்துட் கொண்டு அதற்கும் விடை தருகிறான். அப்பாடல் வருமாறு: அறம் தலை நிறுத்தி, வேதம் அருள் சுரந்து அறைந்த நீதித் திறம் தெரிந்து, உலகம் பூணச் செந் நெறி செலத்தி, தீயோர் இறந்து உக நூறி, தக்கோர் இடர் துடைத்து, ஏக, ஈண்டுப் பிறந்தனன் தன் பொன் - பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான் (5885) இராவணன் போன்றவர்கள் ஆட்சி செய்யும் காலத்தில் ஆட்டம் கண்டுவிட்ட அறத்தை நிலைநிறுத்தவும் மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை அருளோடு எடுத்துக் கூறும் வேத வழிகளைப் பின்பற்றி மக்களை வாழ வைக்கவும், இதையும் மீறித் தவறான வழியில் செல்பவர்களை அழிக்கவும், அவர்களால் துன்பமுறும் நல்லோர்களைக் காக்கவும் இவ்வுலகிடைப் பிறந்துளான் ஒருவன். இவற்றையெல்லாம் அவன் எப்படிச் செய்வான் என்று நினைக்கிறாயா? தன்னுடைய அழகிய திருவடிகளைச் சரணம் என்று அடைபவர்கள் துயரத்தைப் போக்குபவனாகவும் மீட்டும் அத்துயரம் வராதபடி அவர்கள் பிறப்பையே அழிப்பவனாக வும் உள்ளான் அவன். இந்த எட்டுப் பாடல்களும் நீ யார் என்று இராவணன் கேட்ட ஒரே வினாவிற்கு அனுமன் தந்த விடையாகும். முதன் முதலில் இராகவனால் சொல்லின் செல்வன்' என்று பட்டம் தரப்பெறுகிறான் அனுமன். ஆனால், பட்டம் பெற்ற நிலையில் அவன் சொல்லின் செல்வனாக இல்லை. அதற்குரிய தகுதிகள் பெற்றிருப்பினும் அச் செல்வம் வெளிப்பட வேண்டிய நிலை அப்பொழுது இல்லை. கல்வி, கேள்வி, மெய்யுணர்வு ஆகிய அனைத்தும் பெற்றிருப்பினும் இறைக்