பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 கம்பன் எடுத்த முத்துக்கள் காட்சி அல்லது. இறையனுபவம் பெறாத நிலையில் ஒருவன் சொல்லின் செல்வனாக ஆகிவிட முடியாது. இராமனைத் தரிசித்த பிறகு இவையனைத்தும் நிரம்பிவிட்ட காரணத்தாலும் இராமன் திருவாயாலேயே சொல்லின் செல்வன் என்ற பட்டத்தைப் பெற்றுவிட்டதாலும் பூரணத்துவம் அடைகின்றான் அனுமன். கல்வி, கேள்வி, மெய்யுணர்வு என்பவைமட்டும் இருந்தபொழுது மூவரோ, யாவரோ என வினாப் பொருளில்தான் இராமனை நினைக்க முடிந்தது. நேரிடையாகத் தரிசனம் பெற்ற பிறகு இந்த வினாக்கள் எல்லாம் அடங்கி, அரவணைத் துயிலின் நீங்கிய தேவனே அவ்ன், இவள் கமலச் செல்வியே (5184 என்று தேற்ற ஏகாரம் கொடுத்துப் பேசும் உறுதிப்பாடு வந்துவிட்டது, அனுமனுக்கு. அதனால்தான் இறையிலக்கணத்தையும் அந்த இறையோடு உயிர்களுக்கு உள்ள தொடர்பையும், இறப்ப உயர்ந்த அவ் இறைப்பொருளின் எளிவந்த தன்மையையும் உயிர்கள் துயர் துட்ைக்க அப்பொருள் மேலிருந்து கீழிறங்கி வருகிறது என்பதையும் அனுமன் விரிவாகப் பேச முடிந்தது. இராவணன் மேற்கொண்டு எவ்விதமான கேள்வியும் எழுப்ப வேண்டாத முறையில் அவன் வினாக்கள் அனைத்தையும் அவன் கேளாமலேயே மனத்துள் வாங்கிக்கொண்டு அனைத்துக்கும் ஒருசேர விடை தந்தமையின் அனுமன் சொல்லின் செல்வனாக ஆகிறான். இராவணனுடைய கல்வி, தவம் முதலியவை காரணமாகத் தருக்க ரீதியில் இறை இலக்கணத்தைக் கூறினால், ஒரு வேளை அவன் நல்லறிவு பெற்றாலும் பெறக்கூடும் என்ற நல்லெண்ணத்தினால்தான் ஏனையோரிடம் பேசாமல் இராவணனிடம்மட்டும் இவ்வளவு விரிவாகப் பேசினான். நல்லூழ் இல்லாமையினாலும் அகங்காரம் மீதுார்ந்துநின்றமையாலும் இராவணன் செவிகளில் அனுமனின் கூற்றுகள் நுழையவே இல்லை. இதற்கடுத்தபடியாக அனுமனை யாரென்று அறிந்த இராவணன், வாலி நலமாய் உள்ளானா? என்று கேட்கிறான். இவ்வினாவிற்கு விடை கூறப் புகுந்த சொல்லின் செல்வன் 'வாலி இறந்தான்' என்றுமட்டும் கூறாமல், இராவணன் மனத்தின் ஆழத்தில் பொதிந்து கிடக்கும் வினாவையும்