பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 237 மனத்துட கொண்டு, "அஞ்சலை அரக்க! பார் விட்டு அந்தரம் அடைந்தான் அன்றே வெஞ்சின வாலி மீளான்; வாலும் போய் விளிந்தது அன்றே" (5888) என்று கூறுகிறான். வாலி இறந்தான் என்றால் எவ்வளவு பெரிய போர் நடந்திருக்கும் என்ற எண்ணவோட்டம் இராவணன் மனத்தில் தோன்றியிருத்தல் உறுதி. வாலியின் பலத்தை நன்கு அறிந்தவ னாகிய இராவணன் இவ்வாறு நினைப்பதில் தவறில்லை. அந்த வினாவிற்கும் விடை கூறுபவன் போல 'அஞ்சனமேனியான் தன் அடுகணை ஒன்றால் மாழ்கி, துஞ்சினன் (5888) என்று கூறுகிறான். இராமன் செலுத்தியது ஒரே கணை தான். அடுத்த கணைக்குத் தேவையே ஏற்படவில்லை என்ற கருத்தை யெல்லாம் ஒன்றால் என்ற சொல்லால் கூறிய அனுமன், சொல்லின் செல்வனாகமட்டும் அல்லாமல் சொல்லின் பெருஞ் செல்வனாகவும் ஆகிவிடுகிறான். - - - உண்மையை உணர்ந்துகொள்ள மறுக்கும் இராவணன் அனுமனைக் கொல்' என்று ஆணையிடுவதும், தூதனைக் கொல்லல் கூடாது என்று வீடணன் தடுப்பதும் அனுமன் வாலில் தீயிடும்படி இராவணன் ஆணை இடுவதும், அந்த ஆணையைத் திரிசடை மூலமாக அறிந்த பிராட்டி அக்கினி தேவனை வணங்கி, 'அனுமனைச் சுடாது ஒழிக’ என்று வேண்டுவதும், சுடாத நெருப்போடு ஆகாயத்தில் கிள்ம்பிய அனுமன் இலங்கை முழுவதையும் சுற்றிப் பார்ப்பதையும் பிணி வீட்டு படலத்தின் இறுதிப் பகுதி குறிக்கிறது. அடுத்துள்ளது இலங்கை எரியூட்டு படலமாகும். அனுமன் வைத்த தீயால் வணங்காத் தலையனாகிய இராவணனும் அரண்மனையை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. இது ஏன் நிகழ்ந்தது என்று அறிய விரும்பியவனுக்குக் குரங்கு சுட்டது' என்றனர். உடன் உறைவோர். அக்குரங்கைப் பற்றுக’ என ஆணை தந்தான். பற்றச் சென்ற பதினாயிரவரும் மாய்ந்தொழிந்தனர். தன் பணியை முடித்த மாருதிக்கு அழிந்த அசோகவனத்தில் பிராட்டி எவ்வாறு உள்ளாளோ என்ற ஐயம் தோன்றுகிறது.