பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 24's தவிர்க்க முடியாது என்பதை நன்கு அறிந்தவன் ஆதலால் இவ் விளக்கத்தைத் தருகிறான். பிணி வீட்டு படலத்தில் கற்றறிவு உடையவனாகிய இராவணனிடம் இறை இலக்கணத்தை விரிவாகப் பேசுவது மூலமும், இப்படலத்தில் பிராட்டியின் நிலையை இருபது பாடல்களில் விரிவாகப் பேசுவது மூலமும் தான் சொல்லின் செல்வன் என்பதை நிலைநிறுத்திவிட்டான். செலவழிக்க வேண்டிய இடத்தில் இறுக்கிப் பிடிப்பதுதான் செல்வம் உடையோர்கட்குச் சிறந்த இலக்கணம் ஆகும். இந்த இரண்டு இடங்களிலும் மிகத் தாராளமாகச் சொற்களைப் பயன்படுத்த வேண்டிய காரணம் இருந்தமையால் சொல்லின் செல்வன் அச்சொற் செல்வத்தை வாரி வழங்கினான். நீ யார் என்ற ஒரு கேள்விக்கு 32 வரிகளில் விடை கூறினான். ஒரு கேள்வியும் இாாமன் கேட்காத போதும்கூட 80 வரிகளில் விளக்கம் தந்தான். செல்வத்தின் மற்றொரு சிறப்பையும் இங்கே கருதல் வேண்டும். செல்வத்தைப் பெறுபவர் அதன்பிற்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லுகின்றளவில் வழங்கப்படவேண்டும். அதேபோல, இராவணன், இராமன் இருவருக்கும் தன் சொற் செல்வத்தை வழங்கினான் அனுமன். அந்த இருவருமே மேலும் விளக்கம் வேண்டி ஒரு கேள்வியைக் கூடக் கேட்காத அளவிற்கு அச்செல்வம் வழங்கப்பட்டது. இவ்வளவு விரிவாகச் சொற்செல்வத்தை வழங்கிய அனுமன் மற்றோர் இடத்தில் சொற்களை அளந்து பேசுகிறான். நடந்தவற்றை அறிய இராமன் எவ்வளவு ஆவலாக இருந்தானோ அவ்வளவு ஆவலுடன் மயேந்திர மலையில் தங்கியிருந்த அங்கதன், சாம்பன் முதலானவர்களிடம் அவர்கள் விருப்பத்தை முழுவதும் பூர்த்தி செய்யாமல் பாதியில் நிறுத்திவிடுகிறான். அது ஏன் என்று கம்பனே பேசுகிறான். - விழுப்புண்களோடு மீண்டுவந்த அனுமனை நடந்த வற்றைக் கூறுமாறு வேண்டி நிற்கின்றனர் அங்கதன் முதலாயினோர். அனுமன் என்ன சொன்னான் என்று கவிஞன் பேசுகிறான். சென்றது முதலா வந்தது இறுதியாகச் 16