பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 கம்பன் எடுத்த முத்துக்கள் வேண்டும். நன்முடிவு என்று அறிந்தவுடன் மனம் கொந்தளிப்பு நீங்கி, அமைதி நிலையை அடையும். அமைதி நிலை அடைந்த பிறகு அசைபோடும் மனநிலையில் முடிவு எவ்வாறு நிகழ்ந்தது என்பதை விரிவாக அறிய ஆவல் பிறக்கும். மனித மனவியலை நன்கு அறிந்தவர்கள் இவ்வாறுதான் செய்வர். மனித மனத்தின் ஆழத்தையெல்லாம் கண்டுணர்ந்த கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன் இந்த முறையைக் கையாண்டு முடிவை அறியத் துடிக்கும் இராமனுக்கு மூன்று முடிவுகளையும் குறிப்பாலேயே அனுமன் உரைத்துவிட்டான். அது நிகழ்ந்தபிறகு அமைதி அடைந்து அசைபோடும் மனநிலையிலுள்ள இராமனுக்கு 6031 முதல் 605 வரை உள்ள இருபத்தொரு பாடல்களில் அங்கு நிகழ்ந்தவற்றை விரிவாகக் கூறுகிறான், அனுமன். இக் கூற்றுக்களில் ஒரு செய்தியைமட்டும் மூன்று முறை திருப்பித் திருப்பிச் சொல்லுகிறான். "சோலை அங்கு அதனில் உம்பி புல்லினால் தொடுத்த துய சாலையில் இருந்தாள் (6037), மண்ணொடும் கொண்டு போனான் . வான் உயர் கற்பினாள் தன் புண்ணிய மேனி தீண்ட அஞ்சுவான்” (6036), "திண்டிலன் என்னும் செய்கை. வாய்மையால் உணர்தி மன்னோ” (6039), சொல்லின் செல்வன் ஒரே செய்தியை மூன்று முறை சொல்லக் காரணம் உண்டு. மூல நூலாகிய வான்மீகத்தில் சீதையை இராவணன் எடுத்துச்சென்ற முறை வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது. அது தமிழ் மரபுக்கு ஒத்துவராது என்பதால் பர்னசாலையோடு எடுத்துச்சென்றான் என்று கம்பன் மாற்றி விட்டான் என்றாலும், இராவணன் போன்ற ஒரு கொடியவன் ஒரு அபலைப் பெண்ணைப் பலாத்காரம் செய்யாமல் இருந்திருப்பானா என்ற ஐயம் மனத்தின் ஆழத்தில் தோன்றுவது இயல்பு. அவன் பலாத்காரம் செய்யக் கூடியவன்தான். அவ்வாறு செய்யாமைக்குக் காரணம் பலாத்காரம் செய்தால் அவன் அழிதல் உறுதி என்ற சாபம் ஒன்று உண்டு என்று (6038) கூறுவதன்மூலம் பர்ணசாலை யோடு எடுத்துச்சென்றான் என்று கதையை மாற்றியதற்கு அமைதி தேடுகிறான் கம்பன். மனித மனத்தின் நெளிவு சுளிவுகளை அறிந்தவ னாகிய அனுமன் இக்காரணத்தைக் கூறாவிடின் கேட்பவனுடைய மனத்தில் உள்ள நெருடலைத்