பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 239 கவிஞன். மேலும், அனுமன் செய்த இச் செயலைக் கொண்டே இராமன் சில முடிவுகளை அறிந்துகொள்கிறான். அவை வருமாறு: r திண் திறல் அவன் செயல் தெரிய நோக்கினான்; 'வண்டு உறை ஒதியும் வலியள்; மற்று இவன் கண்டதும் உண்டு; அவள் கற்பும் நன்று எனக் கொண்டனன், குறிப்பினால் உணரும் கொள்கையான். - (6029) ஆங்கு அவன் செய்கையே அளவை ஆம் எனா, ஓங்கிய உணர்வினால், விளைந்தது உன்னினான்; (6030) அவன் செயலைக் கூர்ந்து கவனித்தவ னாகிய இராகவன், அனுமன் வாய் திறந்து பேசாமல் இருக்கும்பொழுது () வண்டு உறை ஒதியும் (சீதை நன்றாக உள்ளாள். (2) இவன் அவளை உறுதியாகப் பார்த்துவிட்டான். (3) அவள் கற்பும் நன்று என்ற மூன்று செய்திகளைக் குறிப்பில் உணரும் இராகவன் புரிந்துகொண்டான். இதில் ஒரு சிறப்பு என்ன வென்றால் அனுமன், இராகவன் ஆகிய இருவர் எதிரெதிராக உள்ளனர். அனுமனோ சொல்லின் செல்வன்; வடசொற் கடந்து தென்சொற் கடற்கு எல்லை தேர்ந்தவன் இராமன். எனவே, அவனும் சொல்லின் செல்வன் என்பதாயிற்று. இரண்டு சொல்லின் செல்வர்கள் எதிரெதிராக உள்ளனர். ஆனால், யாரும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. ஏன்? குறிப்பில் உணரும் ஆற்றலை உடையவன் இராகவன். எதனையும் குறிப்பால் உணர்த்தக் கூடியவன் அனுமன். எனவே, தம்பால் உள்ள சொற்களாகிய செல்வத்தைச் செலவழிக்காமலேயே செலவழிக்கும் பயனை இருவரும் அடைந்துவிட்டனர். ஒரு மாபெரும் நிகழ்ச்சியின் முடிவு என்னவாயிற்று என்று அறிந்துகொள்ள மனித மனம் துடித்துக்கொண்டிருக்கும். அந்த முடிவை அறிவதற்கு முன்னர் அது எப்படி நிகழ்ந்தது என்று விரிவாகப் பேசி, அதன் பிறகு முடிவைச் சொல்வது பல சமயங்களில் பொருத்த மற்றதாகி விடும். முடிவை அறியத் துடிக்கும் மன நிலையை அமைதிப் படுத்த அம்முடிவைச் சுருக்கமாக முதலில் சொல்லிவிட