பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 243 நினைத்துப் பார்ப்பதற்கு அரிதாகும். எனவே, அனுமன் பிராட்டியின் கூற்றாக வைத்து இராமன் சற்றும் தாமதியாமல் போருக்கு எழ வேண்டு மென்ற கருத்தைப் புரிந்துகொள்ளுமாறு அவன் ஆறும் இருபது பாடல்களில் 20-ஆவது பாடலில் கூறுகின்றான்: "திங்கள் ஒன்று இருப்பென் இன்னே; திரு உளம் தீர்ந்த - பின்னை, மங்குவென் உயிரோடு" என்று, உன் மலரடி சென்னி வைத்தாள் (8051) சுந்தர காண்டத்தில் இறுதிப் படலத்தில் அவதார நோக்கம் நிறைவேற இராமனைப் புறப்படச் செய்பவன் அனுமனே ஆவான். ஒரு தொண்டன் தனக்கென வாழாமல் பிறர்க்கெனவே வாழ்பவன். தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்பவனே - முயல்பவனே தொண்டனாவான். கந்தர காண்டம் முழுதும் வியாபித்திருக்கின்ற சொற்கள், செயல்கள் அனைத்தையும் கோவைப்படுத்தி ஆழ்ந்து சிந்தித்தால் அவனுக்கென அவன் சொல்லிய சொல்லோ, மேற்கொண்ட செயலோ ஒன்றுகூட இல்லையென்பது தெரியும். கடலைத் தாண்டினான். திருவடி தொழுதான். இவ் இரண்டும் யாருக்காகச் செய்தான்? அவன் அடையவேண்டியது எதுவுமே இல்லை. அவன் வேண்டும் என்று விரும்பியது எதுவும் இல்லை. எனவே, கடல் தாவுதலும் பிராட்டியைக் காலுதலும் அக்ககுமாரன் முதலானாரோடு போர் புரிதலும், அயன் படையால் கட்டுண்ணலும் இராவணனிடம் பேசுதலும், இலங்கை எரியூட்டுதலும், இறுதியாக வந்து இராகவனிடம் வந்து சீதையிருக்கும் திசைநோக்கித் திருவடி தொழுதலும் பிறர் பொருட்டாகச் செய்த தொண்டுகளே ஆகும். தீயோர் இறந்து உக நூறி, தக்கோர் துயர் துடைக்க மானுட வடிவு தாங்கி வந்த பரம்பொருள் எவ்வாறு கைம்மாறு கருதாமல் இப்பணிகளை மேற்கொண்டதோ, அப்படியே அப் பரம்பொருளிடத்தில் அடிமை பூண்ட அனுமனின் தொண்டும் அமைந்திருக்கக் காணலாம். சிறையிருந்தாள் ஏற்றம் கூறியது சுந்தர காண்டம் என்பர். உண்மைதான், அதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. அந்த