பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 கம்பன் எடுத்த முத்துக்கள் ஏற்றத்தைப் பிறர் அறியச் செய்தவன் யார்? அனுமன் இல்லையானால், சிறை இருந்தாள் ஏற்றத்தைப் பரம் பொருளைத் தவிர வேறு யாரும் அ றிந்திருக்க முடியாது. எனவே, அனுமன் பெருமையைக் கூற வந்த கவிஞன், "செவிக்குத் தேன் என இராகவன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகன். (4966) என்று கூறுவது வெற்றுரையன்று. சுந்தர காண்டத்தை முடித்த பிறகு கம்பன் பாடலைச் சற்று மாற்றிச் செவிக்குத் தேன் எனச் சீதையின் புகழைத் திருத்தும் கவிக்கு நாயகன் என்று சொல்லலாம் போல் இருக்கிறது. சிறை யிருந்தாள் ஏற்றத்தைக் கூறுவதா? அவ் ஏற்றத்தை நாம் அறியுமாறு செய்த அனுமனைப் புகழ்வதா? தெரியவில்லை. ஆனால் ஒன்று கூறலாம்போல் தோன்றுகிறது. பரம்பொருளின் துணையாகிய பிராட்டி சிறையிருந்ததிலோ, இராவணன் கொட்டத்தை அடக்கித் தன்னைப் பன்முறை வீழ்ந்து வணங்குமாறு செய்ததோ வியப்பிற்குரியதன்று. காரணம், அவள் பரம் பொருளின் ஒரு கூறு. தன் பெருமை தான் - அறியாப் பரம் பொருளின், பிராட்டியின் பெருமையை எடுத்துக் கூற ஒரு தொண்டன் வேண்டும். அப் பரம்பொருளை உணர்தற்குரிய பர ஞானம், அவ்விலக்கணங்களை ஒரளவு புரிந்துகொள்ளக் கூடிய மெய்யறிவு, புரிந்துகொண்டாலும் அதை எடுத்துச் சொல்லக்கூடிய கல்வி, கேள்வி, எடுத்துச்சொல்லும் ஆற்றல் (சொல்வன்மை) - இவற்றை முற்றிலுமாகப் பெற்ற ஒருவனே, இராகவன், பிராட்டி இருவர் புகழினையும் திருத்த முடியும். திருத்துதல் என்ற சொல்லுக்குப் பக்குவமாகத் தயாரித்து வைப்பது என்பது பொருளாகும். "சமையலுக்குக் காய்கறி களைத் திருத்தியாய் விட்டதா?" என்று இன்றும் வழங்கும் சொற்றொடர் இப்பொருளை விளக்கும். இவை யெல்லாம் இருந்தும்கூட அகங்கார, மமகாரம் ஆகிய இருள் சூழ்ந்திருந் தால், இப்பணியைச் செய்ய இயலாது. எனவே, இவை இரண்டையும் சுட்டெரித்தவனாக இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் மனத்துட் கொண்ட கம்பநாடன். கிட்இந்தா காண்டம் தொடங்கிச் சுந்தர காண்டம் முழுவ்திலும், யுத்த காண்டத்தில் சிற்சில இடங்களிலும்