பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 245 அனுமனைப் பற்றிக் குறிப்பிடுகிறான். அனுமனைப்பற்றி ஒரே இடத்தில் பல பாடல்களாகக் கூறும்பொழுது அதனை முழுவதும் மனத்தில் வாங்கிக் கொள்ள முடியாது. அதில் சில பகுதிகள் நம் மனத்தை அதிகம் கவர்வதால் பிற பகுதிகளை மனம் ஏற்றுக்கொள்வதில்லை. இதனை நன்கு அறிந்த புலவன் அப்பாத்திரம் வரும் இடங்களிலெல்லாம் சில சொற்களாலும், சில தொடர்களாலும் அப்பாத்திரப் பண்பைக் கூறிச்செல்வான். சொல்லப்பட்ட நிகழ்ச்சிக்கும் அதில் பங்கு கொண்ட பாத்திரத்திற்கும் கவிஞன் தரும் அடைமொழி வைரம் பதித்த பொன்போல் அப்பாத்திரத்தை விளக்கப் பயன்படுகிறது. உதாரணத்திற்குச் சில தொடர்களை இங்கே காணலாம்: - கல்லாத கலையும் வேதக் கடலுமே இல்லை (3768) : வன் திறல் மாருதி . . (3928) வன்துணை வயிரத் திண்தோள் மாருதி (4328) கூற்றும் உட்க வாழ்வான்) (4806) அரி உருவான ஆண்தகை (5871) நூற் பெருங்கடல் நுனித்துணர் கேள்வியான் (5040) செறி பெருங் கேள்வியான் (6447) நேர் இலா அறிவன் (6447) நவைபடா ஞானமே, கோட்படாப் பதமே குரக்கு உரு) (3783) தருமத்தின் தனிமை தீர்ப்பான் (3181) அறத்துக்கு ஆங்கொரு துணையென நின்ற அனுமன் ) . (5803 செவ்வழி உள்ளத்தான் - (3764) கோது இல் சிந்தை அனுமன் (4294) அழுங்கா மனத்து அண்ணல் (479) நீதி வல்லோன் . (4478) பழி இல்லான் (4923) மெய்ம்மை தொடர்ந்தோன் (5422) அனைத்தும் இருந்தும்கூடத் தான் பெறும் இறையனுபவத் தைத் தன்னுடைய முன்னேற்றத்திற்குமட்டும் பயன்படுத்து