பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 கம்பன் எடுத்த முத்துக்கள் பவனாக இருந்துவிட்டால் அவனால் பிறர் பயன் அடைய முடியாது. இவை யனைத்தையும் பெற்ற ஒருவன் தன்னலத்தைச் சுட்ட தொண்டனாக இருக்கவேண்டும். இத்துணைப் பண்புகளையும் ஒரே பாத்திரத்திற்கு ஏற்றி, அனுமன் என்ற பெயரில் உலவவிடுகிறான் கம்பநாடன். மனிதப் பண்பையும் தாண்டி நிற்கும் இவ் அனைத்தையும் ஒரு குரங்குப் பாத்திரத்தின்மேல் ஏற்றி உலவவிட்ட கம்பனை எவ்வாறு புகழ்வது என்று தெரியவில்லை. தொண்டு என்ற ஒரு சொல்லின் முழு வடிவு ஆக அனுமன் படைக்கப் படுகிறான். தொண்டனிடத்து அகப்பட்டுக்கொள்ளும் பரம் பொருள்கூட அவனை விட்டு நீங்காதவ னாகிறான். உலக இலக்கியங்களில் தொண்டு என்ற ஒரு பண்புக்கு இத்தகைய ஒரு மாபெரும் வடிவம் கொடுத்த கவிஞர்கள் கம்பன் தவிர யாரும் இலர் என்பது கண்கூடு.