பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கம்பன் எடுத்த முத்துக்கள் எண்ணம், சொல், செயல்களைக் கொண்டு நம் நெஞ்ச மேடையில் கம்பர் உலவச் செய்த வண்ணத்திலேயே விமரிசன வாசகங்களால் பேராசிரியர் அவர்கள் இந்த நூலிலே ஆங்காங்கே தீட்டிக்காட்டுகிறார். சூர்ப்பனகை சூழ்ச்சிப் படல விளக்கத்தில் சூர்ப்பனகை, கரன், இராவணன் ஆகியோர் இயல்புகளை செயல் நோக்கி இயங்கும் தூண்டல்களைத் தெளிவுறுத்துகிறார். இந்த இடத்தில் பாத்திரப் படைப்பு விளக்கத்தைத் தரும்போதே செயல்விளைவுகளையும் விளக்குகின்றார். தடுக்கவியற் பாங்கில் பேராசிரியரின் எழுத்துத் திறனும் எடுத்துரை திறனும் பொலிகின்ற இடம் இது. இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர் அரக்கர் என்று உளர் சிலர் அறத்தின் நீங்கினார் என்பது அரக்கர் இனம்பற்றிய பொது இலக்கணம். ஆயினும், கள்ளி வயிற்றின் அகில் பிறக்கும் என்ற உண்மையையும் நீதிநூல்கள் நினைவூட்டியிருக்கின்றன. கும்பகருணன் . வீடணன் பாசப் பாங்கு எத்தனை தடவை நினைந்தாலும் உள்ளத்துக்குக் கனிவூட்டும், அல்லவா? அப்படி ஓர் இடத்தைப் பேராசிரியர் இந்த நூலிலே காட்டி விளக்கியிருக்கிறார். - * . . . . . "நிகும்பலை அழிவுக்குப் பின்னர்த் தெய்வப் படைகள் பலவற்றைச் செலுத்திப் பயன்படாமல் போகவே தந்தையை நாடிச் செல்கிறான் இந்திரசித்தன். இந்திரசித்து வதைப் படலத்தின் முதல் பத்துப் பாடல்கள் இந்திரசித்தன் வாழ்க்கையில் ஏற்படாத ஒரு மாற்றத்தை அறிவிக்கின்றன. பிரம்மாத்திரம் என்ற படை போக, புதிதாக நாராயணன் படையையும் ஏவிப் பார்த்துவிட்டான், இந்திரசித்தன். உலகம் மூன்றையும் அழிக்க வல்ல படை இலக்குவனை ஒன்றும் செய்யாத தோடுமட்டுமல்லாமல் அவனை வலம் செய்து போயிற்று. 1919) என்பதைப் பார்த்தவுடன் இந்திரசித்தன் மனத்தில் பெருமாற்றம்