பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்:அகஞானசம்பந்தன் 263 உறுதி என்று நிரூபணம் செய்தபின்னும் இராவணன் மனம் மாறவில்லை என்றால், எங்கோ வாழ்ந்த இரணியன் கதைகேட்டு மனம் மாறிவிடுவான என்று நினைப்பதும் அறியாமை யாகும். அப்படி இருந்தும் வீடணன் கூற்றாக இப்படலத்தைக் கம்பன் அமைபூதன் காரணமென்ன? நூற்று எழுபத்தாறு - -ನು ಹಣ ೧೯ಕ கொண்ட இப்படலத்தை ஒரு குறுங்காப்பியம் என்றே பல்கலைச் செல்வர் முனைவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரும் திறனாய்வுச் செல்வர் வ.வே.சு. ஐயரும் கூறியுள்ளனர். வான்மீகி உள்பட வேறு எந்த இராமாயணத்திலும் காணப்படாத இப்பகுதியைக் கம்பன் பாடினான் என்றால், வலுவான காரணம் இருத்தல் வேண்டும். . கம்பனுடைய காலம் 9ம் நூற்றாண்டு என்று முன்னரே கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் அன்றைய நிலையைச் சற்று ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். 6ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி தொடங்கி, 8ம் நூற்றாண்டின் கடைப்பகுதி வரை உள்ள கால கட்டத்தில் நான்கு நாயன்மார்களும் பன்னிரண்டு ஆழ்வார்களும் தோன்றி, பக்தி இயக்கம் என்ற ஒன்றைப் பெரும் சூறாவளியாக மாற்றி, தமிழகத்தில் உலவவிட்டுவிட்டனர்.பாகவத புராணம் கூறுவதுபோல, பக்தியும், வைராக்கியமும் தமிழகத்தில் தோன்றி, கர்நாடகம், மகாராஷ்டிரம் வழியாகப் பிருந்தாவனம் சென்றன என்பதை அறியமுடியும். (பாகவத புராணம் அத்தியாயம் 1, பாடல் 48). நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலத்திற்கு முன்னரே தமிழகத்தில் புகுந்து ஓரளவின்கு வளர்ச்சியும் பெற்றுவிட்ட புத்தம், சமணம் ஆகிய இரு பெருஞ்சமயங்களும் காலூன்றி நின்றன. இவற்றை அடுத்து 8ம் நூற்றாண்டில் தோன்றிய ஆதி சங்கர பகவத்பாதர் அத்வைதக் கொள்கையை இந்தியா முழுவதும் பரப்ப முயன்றார். இந்த மூன்றும் அறிவு வாதத்தை அடிப்படையாகக் கொண்டவை. புத்த சமயம், தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்ததாகும். அதனைப் பெரிதும் எதிர்த்த சங்கரரும் அறிவு வாதத்தையே அடிப்படையாகக் கொண்டு அத்வைதத்தை நிலைநாட்ட