பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கம்பன்.எடுத்த முத்துக்கள். செயல்படுவதை அ.ச.ஞா. சித்தரிக்கிறார்; திறனாய்வாளனும் ஒரு படைப்பாளி என்பது இங்கே விளங்குகின்றது. - . 'இராவணன் மைந்தனாகிய அவன் இன்றுவரை தந்தையை எதிர்த்துப் பேசி அறியாதவன். தான் தெய்வமாக வணங்கும் அத் தந்தையுன் செயல்களை ஆராய்வது தன் கடமை அன்று என்று வாழ்ந்தவனாகிய - அவன் இப்பொழுது மனம் மாறுகிறான்." ஏன் இந்த மாற்றம்? விளக்குகிறார். "எல்லாவற்றையும் இழந்த இந்த நிலையில் தந்தையையாவது இறுதியில் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறான். இந்த மன. உறுதியுடன் தந்தையிடம் சொல்கிறான்", தான் இறப்பது உறுதி என்று தெளிந்த நிலையில் தந்தையாவது காப்பாற்ற நினைத்தது மகன் பாசம். இராவணனுக்கு ஏற்ற வண்ணமாக நிலைமையை விளக்குகிறான். மைந்தனின் பாசம் பயன் தந்ததோ இராவணன், பாசத்தைக்கூட உணரமாட்டாதவனாகி விட்டான். - . "தந்தைமாட்டுக்கொண்ட அன்பாலும் மரியாதையாலும் இன்றுவரை வாய்மூடி, அவன் செயல்களை யெல்லாம் பொறுத்துக் கொண்டிருந்த இந்திரசித்தன் இப்பொழுது வெடிக்கிறான்." இந்திரசித்திடம் தோன்றிய பாசமும் பொங்கிய ஆத்திரமும் இராவணனுக்கு நல்ல முறையில் பயன்படவில்லை. முடிவு என்ன என்பதைப் பேராசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: - "செவிடன் காதில் ஊதிய சங்காக முடிந்து விட்டது” ஆம், வெஞ்சின விதியினை வெல்ல வல்லனோ! சமய, தத்துவக் கணிப்பு இராமாயணத்தைச் சரணாகதி சாத்திரம் என்பர்.