பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் - 25 "...ஆக்கலும், நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா அலகிலா விளையாட்டு உடைய தலைவர்க்குச் சரண்பட்டே காப்பியத்தைக் கவிச்சக்கரவர்த்தி தொடங்குகிறார்; அம்பரத்து அனந்தர் நீங்கிய பெருமானை நினைவில் நிறுத்தியே (10368) காப்பியத்தை முடிக்கிறார். எனவே, கம்ப ராமாயணம் பற்றிய எந்த நூலிலும் சமய, தத்துவ விளக்கம் அமைவதே பொருத்தமாகும். பேரா. அ.ச.ஞா. வின் இந்த நூலிலும் அத்தகைய விளக்கங்கள் பல உள. - - . . வாலியின் மனவளர்ச்சியில் விளைந்த ஆன்மிக மலர்ச்சி அற்புதமாக அ.ச.ஞா. வால் விளக்கப்பட்டுள்ளது. 'இந்நிலையில் இராகவன் எதிரே வருகின்றான். வாலி அவனைக் காண்கின்றான்” - இப்படித் தொடங்குகிறது. வாலி என்ற பக்தனின் ஆன்ம மலர்ச்சி விளக்கம். முதலில் திருநாமம் தெரிதல், தொடர்ந்து திருவுருவம் காணுதல் என்று படிப்படியே வாலியின் ஆன்மிக ஆளுமையை விளக்கிச் செல்லுகிறார். நீலக் கார்முகில் கமலம் பூத்த திருக்கோலத்தில், - - "நீல நிறம், சிவப்பு நிறம் என்ற இரண்டும் -offurror filpiälägir (Primary colours) -g|5th. இவை இரண்டும் மூலப் பரம்பொருளை அறிவுறுத்தும் அடையாளங்கள் ஆகும். தொடக்க நிலை ஆன்மிக மலர்ச்சியை அ.சஞா. விளக்கியுள்ள ஒரு வாக்கியம் வருமாறு! "இராம என்ற சொல்லைக் கண்ணிற் கண்ட பிறகு, வாலி காணும் காட்சி அம்மந்திரத்தின் சொரூபம் போல் உள்ள நீலம், சிவப்பு என்ற நிறங்களின் கூட்டமும் பேராற்றலின் வடிவமே ஆகும்" - - - . . . . . . > * > அம்பு தாக்கியதைத் தீட்சையாகவும் மந்திர உபதேசம் பெற்றதாகவும் காட்டி, பெருமான் காட்சியையும் காட்டியபின்