பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கம்பன் எடுத்த முத்துக்கள் வாலியின் புற / அக மனப் போக்குகளை அற்புதமாக விளக்குகிறார். கடைசியில் வீடுபேறு பெறும் வரையில் ஆன்ம வளர்ச்சியைப் படிப்படியே அசஞா. விளக்கும்போது திறனாய்வாளராகிய கல்லூரி ஆசிரியரைக் காணமுடியவில்லை; காட்டாதனவெல்லாம் காட்டிக் கதி கூட்டும் குருநாதரையே காண்கிறோம். கம்பரிடம் உருவான வாலி அ.சஞா.விடம் புதுப்பிறப்பெய்தி வீடுபெறுகிறான். கம்பர் தீட்டிய ஓவியம்தான்; எனினும், கவிதையில் மறைந்திருக்கும் ஆன்மிகச் செல்வனை இவர் உரைநடையில் தெளிவாகத் தெரியும் ஒவியமாகத் தீட்டியிருக்கிறார். எத்தனை எத்தனையோ... இந்த நூலில் இன்னும் எத்தனை எத்தனையோ கூறுகள் எடுத்துக்காட்டத் தக்கனவாக உள்ளன. எல்லாவற்றையும் பட்டியலிட்டுச் சுருக்கமாக அறிமுகப்படுத்த முயன்றால்கூட இன்னும் பலப் பல பக்க அளவில் இந்த முன்னுரை பாரித்துப் பெருகிவிடும். ஒப்பிலக்கியப் பாங்கு, வாழ்க்கை விளக்கம், கற்பனை பாராட்டல், நாடகச் சுவை ...எனப் பல உள் தலைப்புகளில் எழுதுவதற்கு ஏராளமான குறிப்புகள் இருக்கின்றன. ஆனால், பல சொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற சில சொல்லல் தேற்றாதவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக விருப்பம் இல்லை. - கடைசியாக ஒன்று சரணாகதி சாத்திரம் இது என்பார் சிலர், சிறை இருந்தாள் ஏற்றம் கூறிற்று என்பார் சிலர்; இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் என்பார் சிலர் அ.சஞா. இவற்றுள் எதையும் மறுக்கவில்லை. அறம் தலைநிறுத்த வந்த காகுத்தனின் சரித்திரத்தின் பாவிகமாகப் புலனடக்கம் துலங்குகிறது என்பது அசஞா. வின் விளக்கம். கம்பன் . புதிய பார்வை' என்றநூலில் இக்கருத்தை விளக்கியிருக்கிறார்; இங்கும் அதன் விளக்கம் உண்டு. - இலங்கை சென்று மீண்ட அனுமன், வையகம் தழிஇ நெடிது இறைஞ்சி, வாழ்த்தினான் என்கிறார், கம்பர். இதனைச்