பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 27 சொல்வது திருவடி தொழுத படலம். இதற்குப் பொதுவாக இராமன் திருவடிகளை அனுமன் தொழுத படலம் என்றே பொருள் கொள்ளப்படும். அ.ச.ஞா. இதனை ஏற்கவில்லை; பிராட்டியின் திருவடிகளை நினைத்து வணங்கியதாகவே கொள்கிறார். அவ்வாறு கொள்வதற்குரிய விளக்கத்தை இலக்கியப் புலவராகவும் சமய குரவராகவும் இருந்து பேராசிரியர் தரும் விளக்கம் அற்புதமானது. - இப்படி வியப்பூட்டும் அற்புதங்கள் மிகப் பல உண்டு. நூல் முழுவதையும் படித்த பின் என் நினைவில் நீங்காமல் நிற்கும் ஒர் இடத்தை மட்டும் சுட்டிக்காட்டி, இதனை நிறைவு செய்ய விரும்புகிறேன். கைகேயியை ஒப்பற்ற பெருந் தியாகியாகப் பேராசிரியர் விளக்கி நிறுவியிருக்கிறார். இன்று நாம் எங்கணும் காணுகின்ற பட்டி மண்டப வாதம் போல் மேற்போக்காகப் பார்ப்போருக்குத் தோன்றும். கைகேயி துயவள், மாபெரும் தியாகி என்று பேராசிரியர் வெற்று வாதத்திற்காகப் பேசவில்லை. அறிவின் ஆய்வு நெறி பிறழாமல் - இருள் தீர எண்ணிப் பார்த்து, உண்மையாக நம்பியே கைகேயின் தெய்வ மாட்சியை விளக்குகிறார். நேரே நில் - நிமிர்ந்து பார் நெஞ்சில் பட்டதை வனமாய்ச் சொல் இதுதான் எழுத்தின் மங்கள சூத்திம் என்று கவிஞர் சிற்பி, உண்மை எழுத்தின் இலக்கணத்தை வடித்துக் காட்டுகிறார். அ.ச.ஞா. போன்றவர்களே அந்த மங்கள சூத்திரத்தைத் தாங்க வல்லவர்கள். கைகேயி பற்றிய திறனாய்விலே தம் சத்திய தரிசனத்தை நமக்கு அவர் காட்டியிருக்கிறார். இராவணன் தொடக்கூடாதே என்பதற்காக நிழலுருவில் சீதையைப் படைக்கிறார், துளசீதாசர். வான்மீகத்தை மாற்றி, பர்னசாலையோடு தூக்கிச் செல்ல வைக்கிறார் கம்பர். -