பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 - கம்பன் எடுத்த முத்துக்கள் இப்படி எந்த மாற்றமும் செய்யாமல், கவிச்சக்கரவர்த்தியின் வாசகங்களைக் கொண்டே கைகேயியைப் புரட்சி வகையிலே சித்தரித்துக் காட்டுகிறார், திறனாய்வு வேந்தராகிய என் பேராசிரியர். எவரும் தலை வணங்க வேண்டும் - கைகேயி நினைப்பிலே. அப்படி ஒரு புரட்சியும் இந்த நூலிலே உண்டு. இன்னும், இன்னும், இன்னும் - இப்போது இது போதும். - தமிழ் முனிவர் வாழ்த்து அ.சஞா. வின் மற்றொரு புரட்சி நூலைப் படித்துச் சிறப்புரை வழங்கிய திரு.வி.க. பின்வருமாறு வாழ்த்தினார்: "கம்பர் வளர சேக்கிழார் முதலியோர் வாழத் தோழர் ஞானசம்பந்தருக்கு நீண்ட நாளும், நோயற்ற யாக்கையும், வேறு பல பேறுகளும் பெருக! பெருக! ஆம், ஆமாம். - - ம.ரா.போ. குருசாமி