பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 269 அறவழியில் நிற்பதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்ட வீடணன், வாழும் வீடு கூட அரக்கர் வாழ்க்கையோடு ஒன்றாமல் தனித்து இலங்கிற்று என்பதை, அது யாருடைய வீடு என்பதை அறியாத நிலையிலும் வீடணைப் பற்றி ஒன்றும் தெரியாத நிலையிலும் நுண்மாண் நுழைபுலம் மிக்க மாருதி வீடணன் வீட்டைப் பின்வருமாறு வருணிக்கிறான்: - நிந்தனை நறவமும், நெறி இல் ஊன்களும் தந்தன கண்டிலேன், தரும தானமும் . வந்தனை நீதியும், பிறவும், மாண்பு அமைந்து அந்தணர் மனை எனப் பொலிந்ததாம் அரோ. - மேலே காட்டிய இரண்டு பாடல்களையும் வைத்துப் பார்த்தால், அந்தணர் இல்லம் எனப் பொலிகின்ற ஒரு வீட்டில், ஒளிந்து வாழ்கின்ற தருமமாக வீடணன் இருக்கின்றான் என்பதனை அறிய முடிகின்றது. . வீடணன் என்ற பாத்திரத்தைப் பொறுத்தமட்டில் இரண்டு வினாக்கள் இன்றும் வினவப்படுகின்றன. அண்ணனுக்குக் காட்ட வேண்டிய நன்றியை மறந்து, சந்தர்ப்பம் கிடைத்தபொழுது பகைவனிடம் சேரலாமா என்பது முதல்வினா. அப்படியே சேர்ந்தாலும் அண்ணனைக் காட்டிக்கொடுகின்ற முறையில் பல உளவுகளை இராமனுக்குக் கூறலாமா என்பது இரண்டாவது வினா. இவ்விரு வினாக்களுக்கும் விரிவாக விடை கூறுவதற்கு இங்கு இடமில்லை என்றாலும், சுருக்கமாகச் சில கருத்துக்களைக் காண்பது நலம். இலங்கை வாழ்க்கையோடு ஒட்டாத வாழ்க்கை வாழ்கின்ற வீடணன் காட்டில் உறைகின்ற தவசிகளைப் போல வாழ்ந்து வருகிறான். இங்ங்ணம் வாழ்கின்ற ஒருவன் கொழுகொம்பு கிடைக்காமல் காற்றில் அலைப்புண்டு தள்ளாடும் கொடிபோன்றவன் ஆவான். அக் கொடிக்குப் பக்கத்தில் ஒரு கொழுகொம்பு கிடைக்கும்ப்ொழுது அது எத்தகைய மரம், அதைப் பற்றிப் படருவது நலமோ என்று கொடி சிந்திப்பதில்லை. அதே போல ஒளிந்து வாழ்கின்ற,