பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 கம்பன் எடுத்த முத்துக்கள் இந்தத் தருமம் சந்தர்ப்பம் வந்தபொழுது இருந்த இடத்தை விட்டுப் பெயர்ந்துவிடுகிறது. அதுவும் அவனாகப் பெயரவில்லை. "விழிஎதிர் நிற்றியேல் விளிதி (6372 என்று இராவணன் கூறிய பிறகே ನೆ-7೯T இலங்கை விட்டுப் புற்பபடடான். புறப்பட்டு வானிடை நின்று, மறுபடியும் அண்ணனுக்கு ஒர் இறுதி எச்சரிக்கை செய்துவிட்டு, என் பிழை பொறுத்தி (6376) என்று கூறிவிட்டுப் பெயர்கிறான். வானிடை நிற்கும்பொழுது அனலன், அனிலன், அரன், சம்பாதி என்ற அமைச்சர்கள் நால்வரும் வானிடை வந்து, வீடணனுடன் கூடுகின்றனர். இந்த வினாடிவரை இராமனிடம் செல்லவேண்டும் என்ற எண்ணம் வீடணனிடம் இருந்ததாகத் தெரியவில்லை. இராமன் பெயரைக் கேட்டதிலிருந்து வீடணனுடைய அகமனத்தின் ஆழத்தில் ஏதோ ஒரு புதிய மாற்றம் நிகழ்வதை அவன் உணருகின்றான். அந்த மாற்றத்தைத் தன்னுடன் வந்துள்ள அனலன் முதலானவர்களுக்கு வீடணன் எடுத்துக் கூறுகின்றான். 'அறம்தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனென்; மறந்தும் நன்புகழ் அலால் வாழ்வு வேண்டலென்; பிறந்த என்.உறுதி நீ பிடிக்கலாய் எனத் துறந்தனென்; இனிச் செயல் சொல்லுவீர் என்றான் . . . (6381) இதிலிருந்து, இலங்கையிலிருந்து புறப்படும்பொழுது இராமனுடன் சேரவேண்டும் என்ற எண்ணத்துடன் வீடணன் வந்தான் என்று கூறுவது காப்பியத்தோடு மாறுபடுவதாகும். ஆகாயத்திலே நின்று அமைச்சர்களைப் பார்த்து 'இனிச் செயல் சொல்லுவீர் என்று கேட்பதன்மூலம் உடன் வந்துள்ள அமைச்சரை நன்கு மதித்து அவர்கள் ஆலோசனை கேட்கும் இயல்புடையவன் வீடணன் என்பதை அறியமுடிகிறது. யாருடைய ஆலோசனையையும் கேட்காத இராவணனிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவன் வீடணன் என்பதை அறிகிறோம். . -