பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 271 'யாது இனிச் செயல் என்று கேட்ட வீடணனுக்கு, கல்வியில் மேம்பட்ட அமைச்சர்கள் பின்வருமாறு விடைகறினர்: 'மாட்சியின் அமைந்தது வேறு மற்று இலை; தாட்சி இல் பொருள் தரும் தரும மூர்த்தியைக் காட்சியே இனிக் கடன்' என்று கல்வி சால் சூட்சியின் கிழவரும் துணிந்த சொல்லினார். (6382) இந்த நிகழ்ச்சியை இவ்வளவு விரிவாகக் கம்பன் பாடுவதற்கு ஒரு காரணம் உண்டு. இராமன் வந்ததிலிருந்தே 'ஒரு சூழ்ச்சி செய்து அவனிடம் போகவேண்டும் என்று வீடணன் நினைத்தான் என்று பலரும் கூறும் கூற்று முற்றிலும் தவறானது என்பதைக் காட்டவே கம்பன் இதனைப் பாடுகிறான். தீயனே ஆயினும் இராவணன்பால் அன்பு கொண்ட வீடணன் அந்த இராவணன் இந்திரப் பெரும்பதம் இழக்கின்றான் (6143) என்றும், புத்திரர், குருக்கள், பொருஇல் கேண்மையர், மித்திரர், அடைந்துளோர், மெலியர், வன்மையோர் இத்தனை பேரையும் (6375) அழிக்கத் துணிந்தான் என்றும் நினைந்து எல்லையற்ற வருத்தம் அடைகிறான். அறத்தின் அடிப்படையில் எவ்வளவு எடுத்து ரைத்தாலும் இராவணன் கேட்கப்போவ தில்லை என்பதை அறிந்து வீடணன், நந்தி சாபம், வேதவதி சாபம், இரணியன் கதை என்பவற்றை எடுத்துக் கூறி அச்சமூட்ட முனைகிறான். இராவணன் எதற்கும் மசியப்போவ தில்லை என்பதை அறிந்து வீடணன் உறவுமுறை என்ற எஞ்சி இருந்த ஒரே கட்டை அறுத்துக்கொள்ள விரும்புகிறான். இதனை அறுத்துக்கொண்ட பின் மேலே என்ன செய்வது' என்று புரியாத நிலையில்தான் விண்ணிடை நிற்கின்றான். அண்ணன் என்ற உறவை அறுத்துக்கொண்டாலும், மூவுலகையும். ஆண்ட ஒருவன் வீழ்ச்சி அடைவது பொறுக்காமல் விண்ணிடை நின்றும் அறம் பல கூறுகிறான். இறுதியாக, வாழியாய்! கேட்டியால்: வாழ்வு கைம்மிக ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலுாய்,