பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 கம்பன் எடுத்த முத்துக்கள் இந்த நிலைமை அடைந்துவிட்ட வீடணனுக்கும், இராவணன் தம்பி வீடணனுக்கும் பெயர் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. பழைய வீடணனுக்குரிய உறவுகள், கடமைகள், நியாயங்கள் என்பவை அந்தப் பழைய வீடணன் இறந்தபொழுது (திருவடிதீட்சை பெற்றபொழுதுஅவனுடன் இறந்துவிட்டன. திருவடி தீட்சை செய்யப்பெற்ற வீடணன் புதுப்பிறவி எடுத்துவிட்டான். பழைய உறவு முறையில் அவன் இன்னின்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறியாமை உடையதாகும். இப் புதிய வீடணன் இப் புதுப் பிறப்பிற்குக் காரணமான இராகவன் ஏவலைச் செய்வது தவிர அவனுக்கு என்று எதுவுமில்லை. இந்த துண்மையான கருத்தைத்தான் கவிஞன் மில்டன் தன்னுடைய சானட் LTLou go airfoi, "They also serve who stand and wait orgårps பேசுகிறான். எனவே, திருவடி தீட்சைக்குப்பின் புதிய வீடணன், இராகவனுடைய விருப்பப்படி அவனுக்குத் தேவையானவற்றைச் செய்வதே முறையாகும். இராவண உறவு, வீடணனுக்கு முற்றிலும் தவிர்ந்து விட்டது என்றால் இராவணன் இறந்த பிறகு அவனுக்கு வீடணன் நீர்க்கடன் செய்வது முறையா? என்ற வினா தோன்றும். இதனை எதிர்பார்த்த கவிஞன் இராகவனே நீர்க்கடன் முதலியவற்றைச் செய்யுமாறு வீடணனுக்கு ஆணையிட்டான் என்ற குறிப்பை "நீ இவனுக்கு, ஈண்டு சொன்னது ஒர் விதியினாலே கடன் செயத் துணிதி" (கம்பன் 9917) என்ற பாடலில் கூறுகிறான். நிகும்பலை யாகம் முதலியவைபற்றி அவன் கூறினது நியாயமே ஆகும். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் ஒழிய, வீடணனுடைய செயல்களைப் புரிந்து கொள்ளமுடியாது. மேலும் அவன் துரோகி என்று கூறும் தவற்றினையும் செய்ய நேரிடும். இராவணன் தம்பியாகவே வீடணனை இராமன் நினைத்திருந்தான் என்றால் வீடணனைக் கடிந்துபேசும் சந்தர்ப்பங்களுக்கு இடமே இல்லை. தன்னுடைய தம்பி என்று ஏற்றுக்கொண்ட காரணத்தினால்தான் இலக்குவன் மயக்கம் உற்றபொழுது, "என்னைக் கெடுத்தனை, வீடணா நீ (8227) என்று பேசுகிறான்.