பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 275 இன்னும் விரிவாகச் சிந்திக்க வேண்டிய இப்பகுதி இடம் கருதி இத்துடன் நிறுத்தப்படுகிறது. கும்பகர்ணன்: கம்பநாடனுடைய ஈடு இணையற்ற படைப்பு களில் அனுமனைப் போலவே கும்பகர்ணனும் ஒரு சிறந்த படைப்பாவான். அவன் உடலமைப்புப் பல மலைகள் ஒன்று சேர்ந்ததைப் போல் இருக்கும். இவ்வளவு பெரிய உடம்பைப் பெற்றுள்ள அவன் மிகப் பெரிதும் விரிந்ததுமான மனத்தையும் பெற்றிருந்தான். இராவணன், கும்பகர்ணன், வீடணன் என்ற மூவரிடமும் சகோதரர்கள் என்ற உறவுமுறை போகப் பல பொதுத்தன்மைகளும் இருந்தன. மூவரும் மிகச் சிறந்த கல்வியாளர்கள். ஆயிரம் மறைகளை அறிந்தவர்கள். புத்திக் கூர்மை, வர பலம், நல்லது கெட்டது என்பவற்றை அறிந்து காணும் அறிவின் விளக்கம் ஆகிய இவை இம்மூவரிடையேயும் பொதுக் குணங்களாகும். அறம் எது என்பதை மூவரும் நன்கு அறிந்திருந்தனர். தன்னலத்தின் மொத்த உருவாய் விளங்கிய இராவணன் தன் ஆற்றல் காரணமாகவும், வர பலம் காரணமாகவும் அறத்தை உதறிவிட்டான். நாளாவட்டத்தில் அறம் என்று ஒன்று இருப்பதையே மறந்துவிட்டான். இன்னும் கூற வேண்டுமாயின், அறத்தையும் தான் வெல்ல முடியும் என்ற பயித்தியக்கார முடிவிற்கு வந்தான். இவனை அடுத்துள்ள கும்பகர்ணன் அறத்தினை நன்கு அறிந்தவன். அதன்வழி நிற்க வேண்டும் என்று நினைப்பவன். அறத்தை உணர்தல், அதன்படி நிற்க விரும்புதல் என்ற இரு துறையிலும் கும்பகர்ணனும், வீடணனும் ஒரே நிலையில் நின்றவர்கள். அதை நிலைநிறுத்த முடியாதபொழுது அதனோடு வீழ்ந்து இறக்கத் துணிந்தான் கும்பகர்ணன். வீடணன் அதைவிட்டு விட்டுத் தன் வழியே செல்லத் துவங்கிவிட் டான். கும்பகர்ணனுடைய சகோதர பாசம் ஈடு இணையற்றது. மந்திராலோசனையில் தர்க்க ரீதியாகப் பேசுகிறான். முரண்பாட்டில் சிக்கியவர்கள் எந்த நிலையிலும் காலூன்றி நிற்க முடியாது என்று கூறவருகின்ற அவன் - "ஆக இல் பரதாரம் அவை அம் சிறை அடைப்பேம் மாசுஇல் புகழ் காதலுறுவேம்" (6122)