பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 கம்பன் எடுத்த முத்துக்கள் மாகஇல் புகழ் காதலுறுவேம், பேசுவது மானம் (ஆனால்) இடை பேணுவது காமம்; க.சுவது மானுடரை' என்ற இப்பாடல், கும்பகர்ணனின் நுண்மான் நுழைபுலத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. பிற்ன்மனை நயப்ப்வன் பழி பாவங்களுக்கு ஆளாகமுடியுமே தவிரப் புகழ் பெறுவது என்பது இயலாத காரியம். அதிலும் கும்பகர்ணன் பயன்படுத்தும் இரண்டு சொற்கள் ஆழ்ந்து நோக்கற்குரியன. போரிடைச் சென்று. வெற்றி பெற்று வருபவர்கள் அந்நாட்டு மகளிரைச் சிறை எடுத்துவ்ருத்ல் அந்நாளில், இயல்பாகக் காணப்பட்ட, ஒன்றாகும். சிறை எடுக்கப்பட்டவர்களில் பலர் எதிரிகளின் மனைவிமர்ர்க்ளாகவும் இருத்தல் , கூடும். அப்படியர்ன்ால் அது தவ்று. என்று கூறமுடிய்ாது. அது. அன்ற்ைய அரசு தர்ம்ம்.இராவணன் அவ்வாறு செய்யவில்லை என்பண்தச் சுட்டிக்காட்டவே, 'ஆசுஇல் பரதாரம் என்ற. அடை மொழியைப் பயன்படுத்துகிற்ான் கம்பன். அவனே மாசுஇல் என்று கூறுவதும் நோக்குதற்குரியது. இராவண்ணின் சினத்திற்கு அஞ்சிய அனைவரும் அவன் புகழ் பாடினர். ஆனால், உதட்டளவில் பாடப்பட்ட புகழ் குற்றமுடைய புகழாகும். அப்படிபட்ட புகழைக் கும்பகர்ணன் விரும்ப வில்லை; ஆகவே மாசு இல் புகழ்' என்று பேசுகிறான். அன்றியும் காமவயப்பட்டவன் மான அவமானங்களுக்கு அஞ்சமாட்டான். மானத்தைக் காக்க விரும்புபவன் காமத்திற்கு இடம் தர முடியாது. குலத்து மானம் பேசும் இராவணன், மனத்துள் ஒளித்து வளர்ப்பது தாமத்தையே ஆகும். இவ்வாறு முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டி அறவுரை பகர்கின்றான் கும்பன். ५ • இராவணனைப் பொறுத்த மட்டில் தற்பெருமை பேசித் திரிபவன், ஆனாலும் இசை, புகழ் இரண்டிலும் மிக்க விருப்பம் கொண்டவனாவான். இவ்விரண்டையுமே தன் பலத்தால், அதிகாரத்தால் பெற்றுவிட முடியும் என்று கருதுகின்றான். தற்பெருமையும், தருக்கும் கொண்டவர்கள் நடுநிலையோடு இருந்து ஒன்றை எடைபோடும் தகுதியை இழந்துவிட்டவர்கள் ஆவார்கள். எனவே, தேவர்களும், முனிவர்களும் தன்னைப் புகழ்ந்துரைப்பது வெற்றுரை