பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 277 என்பதை அறியாதவனாகிய இராவணன், அவை அனைத்தும் உண்மை என்றே கருதி விட்டான். - இதன். எதிராகக் கும்பகர்ணன் தற்பெருமையோ, தருக்கோ கொள்ளாமையால் நடுநிலையில் இருந்து எதனையும் ஆயும் மனத் திடம் பெற்றிருந்தான். இராவணன் கூட்டிய மந்திரசபையில் கும்பகர்ணன் பேசுவது அவனது கூர்ந்த மதியையும், ஆழ்ந்த சிந்தனையையும், அகன்ற கல்வியையும் அறிவிப்பதாக உள்ளது. தொடக்கத்திலேயே "நான்முகன் மரபில் வந்தவனாகிய நீ தீயினை விரும்பி மடி: கட்டிக்கொண்டாய். இதன் விளைவு என்னவாகும் எ . சிந்திக்கவில்லை (618), மயன் அமைத்த உன் நகரம் அழிந்து என்று வருந்துகிறாய், உன் அரசியல் ஆடிப்போய்விட்டது என வருந்துகிறாய். இப்படி வருந்தும் நீ, மானிடச் சாதியைச் சேர்ந்தவன் மனைவியைக் கொண்டு வந்துச் சிறைவைத்தாய். முழுப் பாவிகளுக்குக்கூட இதைவிட மோசமான பழிவருமா என்பது ஐயமே (619), என்றைக்கு மற்றொருவன் வீட்டில் வாழும் தவக்கோலம் கொண்ட பெண்மணியைக் கண்டு, ஒரு சிறிதும் இரக்கம் காட்டாமல் நீதி நூல்கள் கூறுபவற்றை மற்ந்து சிறையில் அடைத்தாயோ, எந்த வினாடி இச்செய.ை செய்தாயோ, அந்த வினாடியே அரக்கர் புகழ் மாயத் தொடங்கிவிட்டது. கீழ்மக்கள் செய்யும் புலைத்தொழிலைச் செய்துவிட்டு இசை பெறவேண்டும் என்று நினைப்பது அறிவின்பாற்பட்ட தாகுமோ? (612) குற்றம் இல்லாத ஒருவனுடைய தாரத்தைச் சிறை அடைப்பதும், இதற்கு முற்றிலும் பொருந்தாத குற்றமற்ற புகழை விரும்புவதும், காமத்தை மனத்தில் வைத்துக்கொண்டு, மானத்தைப் பெரிதாக மதிக்கிறேன் என்று சொல்வதும், இந்திரனை வெல்லும் ஆற்றல் உடைய நீ, இந்த இரண்டு மனிதர்களைக் கண்டு அஞ்சுவதும் எவ்வளவு பொருத்தமற்ற செயல்கள் என்பதை அறிவாயோ? (6122. இவ்வாறு தர்க்கரீதியாகப் பேசினான் கும்பன். இந்த ஐந்து பாடல்களிலும் இராவணன் பேச்சிலும், செயலிலும் உள்ள முரண்பாட்டை மிக வெளிப்படையாக அவன் எதிரிலேயே எடுத்துக் காட்டுகிறான். ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து அறிவு அமைந்தவனாகிய