பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 கம்பன் எடுத்த முத்துக்கள் இராவணன் ஒரு தவத்தியை, அவள் கணவன் இல்லாத நேரத்தில் இரக்கம் ஒரு சிறிதும் இல்லாமல் கவர்ந்து சிறைவைப்பது மாபெரும் குற்றமாகும். போரில் பிடித்த பெண்களைச் சிறைவைப்பது உண்டு என்றாலும், இராவணன் வஞ்சகத்தால் கவர்ந்து வந்ததும், அவள்மேல் ஆசை கொண்டிருப்பதும் அவளை விழுந்து வணங்குவதும் எவ்வளவு கேவலமான செயல்கள் எனப் பேசுகிறான். கீழ்மக்கள் செய்யும் இச்செயலைச் செய்துவிட்டு இசையொடும், புகழொடும் வாழவேண்டும், அரக்கர்குல மானத்தோடு வாழவேண்டும்' என்று வாய் கிழியப் பேசுகிறான். இவை இரண்டும் ஒன்று சேரா என்பதை அற்புதமாக எடுத்துக்காட்டி, "புன்தொழிலினால் இசை பொறுத்தல் புலமைத்தோ' (612) என்பதையும் "ஏயின் உறத்தகைய இத்துணையவேயோ?” (6.18) என்றும், "பாவியர் உறும்பழி இதின் பழியும் உண்டோ” (619) என்றும் கூறித் தர்க்கரீதியான தன் வாதங்களுக்கு முடிவாக மேலே கூறியவற்றைக் கூறி முடிக்கிறான் கும் பகர்ணன். அறிவையும் கல்வியையும் தெளிந்த சிந்தனையையும் துணையாகக் கொண்டதால் கும்பகர்ணன் அறிவின் அடிப்படையில் நின்று தருக்கம் பேசுகிறான். இவ்வாறு கும்பன் பேசக் காரணமுண்டு. இராவணனின் "ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து அறிவு அமைந்த” மனநிலையை நன்கு அறிந்தவன் ஆதலால் அறிவின் துணை கொண்டு அவன் தவற்றை எடுத்துக்காட்ட விழைகின்றான். இராவணனைப் பற்றிக் கும் பன் கொண்டிருந்த கருத்தாகும் இது. மந்திரசபையில் அனைவரோடும் ஒருங்கிருந்த வீடணன் அண்ணனுக்கு அறவுரைக் கூற வேறு வழியினைக் கையாளுகிறான். அறவழி, தருக்கம் என்ற இரண்டையும் அறிந்தவன் இச்செயலைச் செய்யமாட்டான். எப்பொழுது இச்செயலைச் செய்தானோ அப்பொழுதே அவன் அறம், தருக்கம் என்ற இரண்டையும் மறந்துவிட்டான் எனத் தெரிகிறது. எனவே, கும்பகர்ணனைப் போல் அல்லாமல் வீடணன் வேறு வழியில் பேச முற்படுகிறான். காமத்தின் அடிப்படை தன்னலமும் அகங்காரமுமே ஆகும். தவறான