பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.சஞானசம்பந்தன் 279 காம வழிப்பட்டவனுக்கு அடிப்படையில் தன்.உயிர்மேல் ஆசை இருந்தே தீரும். அந்த உயிர் இருந்தால்தான் மனமும், மனத்து வழிப்பட்ட காமமும் நிலைகொள்ள முடியும். எனவே எத்துணை வீறாப்பு பேசினாலும் இராவணனுக்குத் தன் உயிர்மேல் எல்லையில்லாப் பற்று உண்டு என்ற ஆழ்ந்த மனவியலைப் புரிந்துகொண்டான், வீடணன். தருக்கத்தையும், அறிவு வாதத்தையும், புண்ணிய பாவங்களையும், நன்மை தீமைகளையும் ஒருவன் அறிந்துகொள்ளாமல் செய்வது மீதுர்ந்த காமமாகும். அந்தக் காமாந்தகாரனை மேலே சொல்லிய அறிவு, தருக்கம், கல்வி என்பவற்றால் திருத்தா முடியாது. ஆனால், இச்செயலைச் செய்வதால் அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறினால், காமாந்தகாரனும் நின்று சிந்திக்கத் தொடங்குவான். எனவே, இராவணனுடைய மனத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் தற்காப்புணர்ச்சியைத் துண்டிவிடுகிறான் வீடணன், கர துடணர்கள் வதத்தை அறிந்தபிறகு, இராம இலக்குவர்கள் 'கொச்சை மானுடர் அல்லர்” என்ற உண்மையை நன்கு அறிந்துகொண்டான் இராவணன். கழிபெரும் காமத்தால் தூண்டப்பெற்றுச் சீதையைக் கொண்டுவரவேண்டும் என்ற திட்டத்தை முடிவு செய்துகொண்ட உடனேயே இராவணன் அதற்குரிய வழிகளை நன்கு சிந்தித்தான். இருவருடனும் போரிட்டுச் சீதையைக் கொண்டுவருவது இயலாத காரியம். தன் ஊரில் அல்லாமல் காட்டிற்குச் சென்று சிறை எடுக்க முயன்றால் தன் படைகளைக்கூட அங்குக் கூட்டிச் செல்லமுடியாது. இராம இலக்குவர்களைத் தளியேயும் வெல்லமுடியாது, படைகளை அழைத்துச் செல்லவும் முடியாது. எனவே, தன் காரியம் நிறைவேற வேண்டுமானால் அதைச் சூழ்ச்சியால்தான் செய்யமுடியும் என்று கண்டுகொண்டான், இராவணன். இராமன் ஒருவனே, கர துடனர்களை வில் ஒன்றினால் மூன்று கடிகைக்குள் விண்ணில் ஏற்றினான் என்று கூறினாள் சூர்ப்பணகை. இராமன் ஒருவனுடைய பலம், இத்தகையது என்றால் இப்பொழுது இலக்குவனும் உடன் இருக்கிறான். எனவே, நேரிடையாகப் போரில் புகுந்தால் தன் உயிருக்கு இறுதி நேர்த்தாலும் நேரலாம்