பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் - 281 இப்பொழுது அந்த மூன்றுமே ஒன்றாகச் சேர்ந்துள்ளது என்பதையும் கூறுகிறான். மனிதரின் பிரதிநிதியாக இராமனும், விலங்கின் பிரதிநிதியாக அனுமனும், பெண்ணின் பிரதிநிதியாகச் சீதையும் இப்பொழுது ஒன்றாகச் சேர்ந்து அவனை எதிர்ப்பதால் இறுதி நிச்சயம் என்று எடுத்துக்காட்டுகிறான். உயிரச்சம் கொண்டவனுக்கு மேலும் அச்சத்தை விளைவிக்கவே இம்முறையைக் கையாளுகின்றான் வீடணன். இவனுடைய இந்த வாதத்தை எளிதில் புறக்கணிக்கிறான் இராவணன், வாலி என்ற ஒரு குரங்கினிடம் தோற்றால் கொலைவெறி உள்ள எல்லா குரங்கும் என்னை வெல்லும் என்று நினைப்பது தர்க்கரீதியாகத் தவறு என்கிறான் இராவணன் இராவணனுடைய இந்த அலட்சிய மனப்பான்மைக்கும் காரணம் அவனுடைய தன்னம்பிக்கை, வர பலம் என்று இரண்டுமே ஆகும். வேறு வழியில்லாத வீடணன், இந்த இரண்டு கோட்டைகளையும் (தன்ன்ம்பிக்கை, வர பலம்) தகர்க்க நினைத்து இரணியன் வதையைக் கூறுகிறான். இரணியனுடைய தன்னம்பிக்கை, வர பலம் என்பவை, இராவணனுடையதை விடப் பல மடங்கு உயர்ந்தவை ஆகும். மனிதரால், விலங்கால் அழிவு வரக் கூடாது என்ற வரத்தை இராவணன் பெறவில்லை. இரணியன் அந்த வரத்தையும் தனித் தனியே பெற்று வைத்திருந்தான். பெண்ணாசை உடையவன் அல்லன் ஆதலால் எந்தப் பெண்ணின் மூலமும் அவனுக்கு அழிவு வரவில்லை. அந்த வரத்திலும் ஓர் ஒட்டை இருந்தது. விலங்காலோ, மனிதராலோ அழிவு வரக்கூடாதவரம். இவை இரண்டும் சேர்ந்த நரவிலங்கு இரணியனை அழித்துவிட்டது. இவ்வாறு எடுத்துக்காட்டுகிறான், வீடணன். வீடணன் வாதம் முழுவதிலும் மானம், வீரம், புகழ் என்ற ஒன்றுபற்றியும் அவன் பேசவில்லை. . தன் கருத்துக்கு மாறுபட்ட வாதங்கள் புரிந்த் கும்பகர்ணனிடம் இராவணன் கோபம் கொள்ளவில்ல்ை, ஆனால், அதே காரியத்தைச் செய்த வீடணனிடம் ஏன்