பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 கம்பன் எடுத்த முத்துக்கள் சினம் கொள்ள வேண்டும்? விழி எதிர் நிற்றியேல் விளிதி என்று ஏன் வீடணனிடம் மட்டும் கூறவேண்டும் ? வீடணனுடைய வாதங்களைப் பொறுமையாகக் கேட்ட இராவணனுக்கு ஒர் உண்மை தெளிவாயிற்று. அந்த வீடணன் தன்னுடைய அகமனத்தின் ஆழத்தில் புதைந்திருக்கிற உயிராசை என்னும் ரகசியத்தைப் புரிந்து கொண்டான்; என நினைப்பதால்தான் இராவணன் கோபம் எல்லை கடந்தது. பிறர் அறியாவண்ணம் அடிமனத்தின் ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டுள்ள இந்த இரகசியத்தை வீடணன் கண்டுகொண்டது இராவணனுக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டாக்கி விட்டது. வீடணனைப் பார்க்கும் தோறும், தன் அகமனத்தின் ஆழத்தைப் புரிந்துகொண்டவன் என்ற எண்ணம் தோன்றுமாதலால் இராவணன் அவனைப் பார்த்து, என் முகத்தில் விழிக்காமல் ஒடிப் போ' எனப் பேச நேர்ந்தது. கும்பகர்ணன், வீடணன் என்ற இருவரிடையே உள்ள வேறுபாட்டை, அணுகுமுறையை வாழ்வின் குறிக்கோள்களை இதுவரை கண்டோம். . குறிக்கோள்களும், அணுகுமுறையும் வெவ்வேறாக ஆகிவிட்டமையின் இருவரும் வெவ்வேறு வழிகளில் சென்றுவிட்டனர். சாரமற்ற தன் வாழ்க்கைக்கு மரணமே சிறந்த பரிசு, அதுவும் இராமன் போன்ற ஒருவன் கையால் இறப்பது புகழுடைய செயலே என்கிறான் கும்பன். போர்க்களத்தில் வீடணனைச் சந்தித்த கும்பன், ‘புலையுறு மரணமெய்தல் எனக்கு அது புகழதேயால்" எனக் கூறிவிடுகிறான். அண்ணன் பொருட்டாகத் தன் அழிவை இரு கரம் நீட்டி வரவேற்கத்துணிந்தவிட்டான் கும்பன். எந்த வகையில் பார்த்தாலும் அவன்மேல் குற்றம் சொல்ல வழியே இல்லை. உண்டவர்குரியது என்ற ஒரு சட்டத்தை வகுத்துக்கொண்டு, அந்த வளையத்துள் இருந்து வெளிவர மறுக்கிறான். இதனாலேயே கவிஞன், கும்பனுடன் போர்தொடங்கிய இராமன் பற்றிக்கூறவரும்பொழுது "வள்ளலும் மலர்க்கரம் விதிர்ப்புற்றான்" (762) என்று கூறுகிறான். அப்பழுக்கற்ற மாபெரும் ஆற்றல் வடிவான கும்பன் நன்றிக்கடன் என்ற ஒன்றிற்காகவே இறக்கத்துணிந்து