பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 - கம்பன் எடுத்த முத்துக்கள் சிலையினை நோக்கும்; தேவர் செய்கையை நோக்கும்; செய்த கொலையினை நோக்கும்; ஒன்றும் உரைத்திலன், களிப்புக் கொண்டான். 918) என்ற பாடல் மூலம் அந்த நால்வரிடையே நடைபெற்ற ஒரு நாடகத்தையே நம் கண்முன் கொண்டுவருகிறான் கம்பன், இந்த மவுனத்திற்குப் பிறகு, உதிரம் படிந்த தம்பியின் தோள்களைத் தழுவிக்கொண்டு, "சிதை என்னிடம் வந்துவிட்டதாகவே கருதுகிறேன்" என்று கூறுவதோடு, 'தம்பி உடையான் பகை அஞ்சான்' என்ற முதுமொழியை மெய்ப்பித்தாய் என்றுதான் கூறினானே ஒழிய, இலக்குவன் வெற்றியைப் பாராட்டிப் பேசவில்லை. ஆனால், கடும்போர் செய்து வெற்றி பெற்ற இலக்குவனையோ அவனைத் தோளில் சுமத்து ரதம் போல் உதவிய அனுமனையோ பாராட்டாமல் விட்டுவிட்டு, இராமன் பேசும் சொற்கள் வியப்பைத் தருவதாகும். இலக்குவனைப் பாராட்டாதது மட்டுமில்லை, அத்னெதிராக இலக்குவா இவ்வெற்றி நின்னால் விளைந்தது அன்று, அனுமன் என்பவனாலும் அன்று, உண்மையில் இது வீடணன் தந்த வெற்றியே ஆகும் என்ற கருத்துப்பட, - ஆடவர் திலக! நின்னால் அன்று இகல் அனுமன் என்னும் சேடனால் அன்று வேறு ஒர் தெய்வத்தின் சிறப்பும் அன்று விடணன் தந்த வென்றி, ஈது என விளம்பி மெய்ம்மை, ஏடு அவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன், இனிதின், இப்பால். (9185) இராமன் இவ்வாறு கூறக் காரணம் என்ன? மறைவாக நடைபெற்ற நிகும்பலை யாகத்தை அறிந்துவந்து சொன்னது பெரிய உதவிதான், மறுப்பதற்கில்லை. அந்த உதவிக்காக "வீடணன் தந்த வெற்றி சது" என்று இராமன் கூறுவது முறையாகுமா? - ஆழ்ந்து சிந்தித்தால், இரண்டாவது முறையாகப் பச்சாதாப மேலீட்டினால் இராமன் இவ்வாறு கூறுகிறான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். 'என் னைக்