பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 கம்பன் எடுத்த முத்துக்கள் வாழவந்தால் மனிதர்களுக்குரிய சில இயல்புகள் அவர்களிடத்தும் இருந்தே தீரும். இக் குறைகளே, இப்பாத்திரங்கள்மாட்டு நாம் அன்பு செய்யவும், உறவு கொண்டாடவும் உதவுகின்றன. பிரபோத சந்திர்ோதயம் என்ற வடமொழி உருவக நாடகத்தில் பேசப்படும் ஒரு கருத்து இங்கே நாம் கவனிக்கத்தக்கதாகும். நிர்க்குனப் பிரம்மம்கூடச் சகுணப் பிரம்மமாக மாறும்பொழுது, அப்பிரம்மம் உலகிடை மக்களாகத் தோன்றினால், மக்களிடம் காணப்படும் சிறு குறைகள் அந்தச் சகுணப் பிரம்மத்திடமும் காணப்படும். இக் கருத்து, இராமன்பற்றி நாம் மேலே கூறிய சில கருத்துகளுக்கு அரண் செய்வதாகும். மாபெரும் செயலைச் செய்த இலக்குவனை இராமன் பாராட்டாமல் வீடணன் தந்த வெற்றி ஈது என்று கூறியதற்கு இதுவரை கூறப்பெற்ற காரணத்தை அல்லாமல் மற்றொரு காரணமும் இருக்கலாம் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. கோதாவரி போன்று ஆழமும், தெளிவும் உள்ள கம்பநாடன் பாடல்களில் வரும் சில சொற்களும் சொற்றொடர்களும் அவை அமைந்திருக்கும் நிலைக்களமும் சிந்திக்கச் சிந்திக்கப் புதிய புதிய பொருள்களைத் தருவனவாக அமைந்துள்ளன. வீடணனைச் சமாதானப்படுத்த, வீடணன் தந்த வெற்றி ஈது என்று கூறினான் என்பதை எடுத்துக்கொண்டாலும், இப்பாடலில் முதலில் வரும் ஆடவர் திலக நின்னால் அன்று என்ற சொற்களை ஏன் பயன்படுத்த வேண்டும். இதைச் சொல்லாமலேகூட, வீடணன் தந்த வென்றி ஈது என்றுகூடச் சொல்லியிருக்கலாம். அதுவே, வீடணன் மனப் புண்ணை ஆற்றுவதற்குப் போதுமானதாக இருக்கும். அப்படி என்றால் வெற்றி எக்களிப்போடு வரும் ஒருவனைப் பார்த்து, 'இந்த வெற்றி உன்னால் அன்று என்று கூறுவதன் காரணம் ஏதோ ஒன்றிருக்க வேண்டும். வேண்டுமென்றேதான் இராகவன் இதனை இவ்வாறு கூறுகிறான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஏனென்று சிந்தித்ததில் கம்பனுடைய பாத்திரப் படைப்பில் உள்ளே ஒளிந்து நிற்கும் நுண்மைகள் வெளிப்படும். . . . . . .