பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 295 தொடக்கத்திலிருந்தே, இலக்குவன் என்ற பாத்திரத்தைக் கம்பன் படைத்த முறையைப் பார்த்துக்கொண்டே வந்தால், சில அடிப்படைகளைப் பார்க்க முடியும். பரம்பொருளின் வடிவாகிய இராமனிடத்து அன்பு பாராட்டுபவர்கள் பல திறத்தவர் என்பதை அறியலாம். பரதன், குகன், அனுமன் என்று மூவருடைய அன்பு இராமபக்தி) ஈடு இணையற்றது. அந்த அன்பில் அகங்கார, மமதாரங்கள் அறவே இல்லை. சர்வ பரித்தியாகத்தின் அடிப்படையில் தோன்றிய அந்த அன்பு ஒரு தனிப்பட்ட வகையைச் சேர்ந்தது. இவர்கள் இராமனிடம் செலுத்துகின்ற அன்பில் தம்மைத் தாமே கரைத்துக்கொண்டவர்கள். அன்பே வடிவான மூவர் வாழ்க்கையில், இவர்களையும் இவர்கள் செலுத்தும் அன்பையும் பிரித்துக் காண்பது கடினம். இந்த அடிப்படையை கண்ணப்பர் புராணத்தில் சேக்கிழார், மிக விளக்கமாகத் தெளிவுபடுத்துகிறார்.

  • gs so ow-to------, ************* -- யாக்கைத் 'தன்பரிசும், விணைஇரண்டும், சாரும் மலம் மூன்றும் அற அன்பு பிழம்புஆய்த் திரிவார்." (பெ.பு.803)

இந்த அடிப்படையில் பார்த்தால், குகன் என்ற பாத்திரம், தான் என்ற நினைவும், அந்நினைவால் உண்டாகக்கூடிய பாவ புண்ணிய விளைவுகளும், அந்தத் தரனுக்குரிய ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் அற்றுப் போக, அன்பே வடிவாகக் காட்சி அளிக்கிறான் கங்கை வேடன். இந்நிலையில் குகன் என்ற ஒருவன், இராமன் என்ற ஒருவன், அந்த இராமனிடம் செலுத்தப்படும் அன்பு ஆகிய மூன்றும் மறைந்துவிட, முழுவதும் அன்புமயமாகவே காட்சி அளிப் பதைக் காணலாம். இந்த விளக்கம் ஏனைய இரண்டு பாத்திரங்களாகிய பரதன், அனுமன் என்ற இருவருக்கும்; பொருந்துவதாகும். - - * ... : - இதனெதிராக, இலக்குவன் இராமனிடம் செலுத்தும் அன்ப் பிறிதொரு வன்கயைச் சேர்ந்ததாகும். இந்த அன்பில் தான் மறைவதேயில்லை. நான் அன்பு செய்கிறேன்' என்ற எண்ணமும் மாறுவதில்லை. அதன் பயனாக என்னால் அன்பு செய்யப்படும் பொருளுக்கு நான் உதவி செய்கிறேன்.